பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 திருவாசகம் - சில சிந்தனைகள் துரியத்தில்மட்டும் சமாதியும், விழிப்பும் உண்டு. ஆதலின் ஒரளவு சமாதி அனுபவத்தைப்பற்றிப் பேசக் கூடிய வாய்ப்புடைய நிலை துரியநிலையே ஆகும். துரியம் இறந்த சமாதி நிலையில் அனுபவிக்கப்பெறும் பொருள் இறைவன் ஆதலால் துரியமும் இறந்த சுடர்' என்றார். ‘தெரிவு அரிது ஆகிய தெளிவு என்பதில் தெரிவு, தெளிவு என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. தெரிவு என்பது அறிவின்பாற்படும். ஒன்றொன்றின் இயல்பையும் ஆய்ந்து இது எத்தகையது என்று தெரிவு செய்யும் நிலை அறிவின்பாற்பட்டதாகும். தெளிவு என்பது உணர்வின்பாற்பட்டதாகும். அறிவைப் போல உணர்வு காரண காரிய ஆய்வில் ஈடுபடுவதில்லை. உணர்வைப் பொறுத்தமட்டில் தெளிந்த நிலை, குழம்பிய நிலை என்ற இரண்டுமட்டுமே உண்டு. தெரிவு அரிதாகிய தெளிவு என்றமையால் அறிவின் துணைகொண்டு ஆயமுடியாத தெளிவு என்றார். இந்தத் தெளிவு கல்வி முதலியவற்றால் பெறப்படுவது அன்று. ஞானசம்பந்தப் பெருமானைப்பற்றிச் சொல்லவந்த சேக்கிழார் உவமை யிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் என்று கூறுவதால், மெய்ஞ்ஞானமாகிய தெளிவு உணர்வின் பாற்பட்டது என்பதைக் கூறுகின்றார். அடிகளார் தெரிவு அரிதாகிய தெளிவே' என்று கூறுவதால் அறிவு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு நிற்பதும், உணர்வு ஒன்றிற்கு மட்டுமே கிடைப்பதுமான தெளிவு என்று இறைவனைச் சுட்டுகிறார். தோளா முத்தச் சுடரேட் என்பது குளிர்ந்த ஒளியை உடைய முத்துப்போன்றவன் என்று பொருள்படும். ஒளிவிடும் பொருள்கள் வைரம்போன்ற பல இருப்பினும், முத்தை இவர் கூறியதன் காரணம், இவர் பாண்டி நாட்டார் என்பதாலேயே ஆகும்.