பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 295 பேர்ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி தாளி அறுகின் தாராய் போற்றி நீள் ஒளி ஆகிய நிருத்தா_பேற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி (200-204) நாம, ரூபம் கடந்த பரம்பொருளுக்கு அன்பர்கள் தம் அன்பின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான பெயர் களைச் சூட்டினார்கள். இங்கு 'ஆயிரம் உடை'ய என்பது ஆயிரக்கணக்கான என்ற பொருளில் பேசப்பட்டதே அன்றி சகஸ்ர நாமம்’ என்ற பொருளில் வந்ததன்று. இதனையே பின்னரும் 'ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ (திருவாச1- என்று பாடியுள்ளார். 'நீளொளி ஆகிய நிருத்தன்” என்பதில் ஒரு புதிய சிந்தனையை அடிகளார். பேசுகிறார். நிருத்தா என்றால் நாட்டியமாட வல்லவனே என்பது பொருளாகும். நிருத்தத்தில் பல்வேறு தோற்றநிலைகள்(poses) உண்டு. இதில் உடலின் உறுப்புகள் அசைந்து பல்வேறு நிலைகளில் ஒவ்வொரு விநாடி நின்று செல்லும். நிருத்தத்தில் ஒரு விநாடியில் காணப்பட்ட ஒரு தோற்றநிலை மறு விநாடியில் இராது. ஆகவே எந்த நடனத்திலும் ஒரு குறிப்பிட்ட விநாடியில் அப்போது, உள்ள நிலையைக் காணலாமே தவிரக் கழிந்த பல விநாடிகளுக்கு முன்னர் இருந்த நிலையைக் காண (Լpւգ-Ամո5I. ஆனால் இறைவன் ஒளி வடிவானவன். அவன் ஆடுகின்ற ஆட்டத்தின் ஒவ்வோர் அசைவிலும், அசையும் உறுப்புகள் ஒளி வடிவினதாக இருத்தலால் தோற்ற நிலைகள் தொடர்ந்து காணப்படும். இதை அறிவுறுத்தவே 'நீள் ஒளி ஆகிய நிருத்தா என்றார்.