பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 - திருவாசகம் - சில சிந்தனைகள் 'சிந்தனைக்கு அரிய என்றதால் சித்தத்தின் ஒரு பகுதியில் சிந்திக்கத் தொடங்கினால் அவன் சிக்க மாட்டான்; ஆனால், சித்தம் முழுவதையும் இச் சிந்தனைக்கே இடமாக ஆக்கினால், நிச்சயமாகச் சிக்குவான் என்னும் பொருள்தோன்ற இவ்வாறு கூறினார். இக்கருத்துச் சரியானது என்பதை நாவரசர் பெருமான் 'சிந்திப்பு அரியன” என்று தொடங்கும் திருவிருத்தத்தில் சிந்திப்பு அரியன சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன முத்திகொடுப்பன (திருமுறை:4-92-1) என்று பாடுகின்றார். ‘சிந்திப்பு அரியன” என்று கூறிவிட்ட பின்னர் ‘சிந்திப்பவர்க்கு’ என்று கூறுவதால் சித்தம் முழுவதையும் சிந்திப்பதற்கே செலவிட்டால் அவன் திருவடிகள் முத்தி கொடுப்பன என்கிறார். அடிகளார், சிந்தனை நின்தனக்கு ஆக்கி’ (திருவாச:526) என்று கூறுவதும் இக்கருத்தையே வலியுறுத்தும். அன்றியும் 'சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் (திருவாச:1-17) என்றும் கூறுவதால், வேறு சிந்தனைக்கு இடமின்றி சித்தம் முழுவதிலும் அவனே குடிகொண்டுள்ளான் என்ற பொருளைப் பெறவைக்கிறார். மந்திர மாமலை மேயாய் போற்றி எம்தமை உய்யக் கொள்வாய் போற்றி புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி கருங்குருவிக்கு அன்று அருளினை போற்றி இரும்புலன் புல்ர இசைந்தனை போற்றி படி உறப்பயின்ற பாவக போற்றி அடியொடு நடு ஈறுஆனாய் போற்றி (205–212) குருவின் திருவருள் தம்மிடம் பாய்கின்றவரை இந்தப் பெரிய ஐந்து புலன்களும் ஒரோவழி அடிகளுக்குக் கட்டுப்