பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 திருவாசகம் - சில சிந்தனைகள் பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் குழைத்த சொல் மாலை கொண்டருள் போற்றி புரம் பல எரித்த புராண போற்றி பரம் பரம் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண போற்றி போற்றி சயசய போற்றி (213–225) அடிகளார் அமைச்சுத் தொழில்பூண்ட காலத்துப் பாண்டி மன்னனாய் விளங்கியவன் இரண்டாம் வரகுண பாண்டியன் என்பது ஆய்வாளர் கண்ட முடிபாகும். இவனுடைய தம்பியாகிய அவனிநாராயணன் என்பவன் தமையன் பெயரில் ஆட்சி செய்துவந்தான். காரணம், வரகுணன் மிகப்பெரிய சிவ பக்தனாகவும், திருக்கோயில் தோறும் சென்று வழிபடுபவனாகவும் இருந்தமையின் ஆட்சிப் பொறுப்பைத் தம்பியிடமே விட்டுவிட்டமை ஆகும். என்றாலும், கல்வெட்டுக்கள் வரகுணன் பெயரிலேயே வரையப்பெற்றன. அவனிநாராயணன் தந்த தளவாய்புரச் செப்பேட்டில் வரகுணனைப்பற்றிப் பின்வருமாறு பேசப்பெற்றுள்ளது. பிள்ளைப் பிறை சடைக்கணிந்த பினாகபாணி உளத்திருத்தி உலகம் காக்கின்ற நாளில் என்று அச்செப்பேடு தொடங்குகிறது. எனவே வரகுணனின் தனிச்சிறப்பாகப் பேசப்பெற்றது அவ்னுடைய சிவ பக்தியையே ஆகும். இதுவன்றி பட்டினத்துப்பிள்ளை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவையில், வரகுணன் சிவபக்தி காரணமாகத் திருவிடைமருதுரரில் செய்த பல செயல்களை எடுத்துக்கூறி, இறுதியாகப் பெரிய அன்பின் வரகுண தேவரும்’ என்று பாடியுள்ளார். . இத்தகைய சிறப்பு வாய்ந்த இரண்டாம் வரகுண பாண்டியனை அடிகளார். இங்கே குறிப்பிடுகிறார். மானுடம் பாடாத அடிகளாரே நரகொடு சுவர்க்கம்