பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 திருவாசகம் - சில சிந்தனைகள் சந்தேகத்திற்கு இடமின்றி ஒருமுகமான முடிவிற்கு வருதலைக் குறிப்பதற்கே ஆகும். மயக்கம் மனித அறிவோடு உடன்பிறந்ததாதலின் அதனைப் போக்குதல் கடினம் என்பதை உணர்த்தவே மையல் துணிப்பாய்’ என்றார். - பொருந்துவது எது பொருந்தாதது எது; தக்கது எது தகாதது எது; நல்லது எது தீயது எது என்பதை ஒருதலையாகத் துணிய முடியாத குழப்பம் மிகுதியாக உடையன் யான். என்றாலும், நாய் போன்றவனாகிய நான், உன்னைக் குழைவிப்பான்வேண்டிப் பாடிய இச் சொன்மாலையை ஏற்றுக்கொண்டு அருள்புரிவாயாக. குழைவிப்பான்வேண்டி என்று எதிர்காலத்தால் சொல்ல வேண்டிய ஒன்றை, குழைத்த சொன்மாலை என்று இறந்தகாலப் பெயரெச்சத்தால் கூறியமை வியப்பைத் தருவதாகும். ஆனால் எதிர்காலத்திற்குப் பதில் இறந்தகாலப் பெயரெச்சம் இப் பாடலில் இடம் பெற்றமைக்கு, காலவழுவமைதி என்று கூறுவது பொருத்த மற்றதாகும். ஆழ்ந்து சிந்தித்தால் இந்த இறந்தகாலப் பெயரெச்சத்தை இங்கே பெய்யுமாறு செய்தவன் ஆடவல்லானே தவிர அடிகளார் அன்று என்பது நன்கு விளங்கும். - இறைவனையே குழைத்த சொன்மாலை என்றால் இந்தத் திருவாசகப் பாடல்கள் ஏனைய மனிதர்களைக் குழைப்பது புதுமையன்று. இறைவன் எல்லா உயிர்களிலும் தங்கியுள்ளான் ஆதலால், அவனைக் குழைத்த இப் பாடல்கள் விலங்கு, பறவை முதலிய எல்லா உயிர் களையும் குழைக்கும் என்பதில் ஐயமில்லை. இதனால் தான் குழைக்கும் சொன்மாலை என்று கூறாமல், 'குழைத்த சொன்மாலை என்றார். இந்த நுணுக்கத்தை நன்கறிந்த வள்ளலார், ... ."