பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 திருவாசகம் - சில சிந்தனைகள் மகாகவியும் தாம் இயற்றிய ரகுவம்சத்தின் கடவுள் வாழ்த்தாக அமைத்துள்ள முதல் பாட்டை வாக்கார்த்த' என்று தொடங்குகிறார். இதன் பொருள் சொல்லும் பொருளுமாய் நின்ற உமா காந்தனை வணங்குகின்றேன். என்பதாகும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, ஒசை ஒலி எலாம் ஆனாய் நீயே (திருமுறை :6-38-1) என்று நாவுக்கரசர் பெருமான் பாடுவதும் இக்கருத்தை வலியுறுத்தும். . - - இந்த ஓசை என்பது உள்ளிடு அற்ற சப்தத்தையும், ஒலி என்பது சொல் வடிவையும் குறிப்பதாகும். காளிதாசன் கருத்தை வாங்கிக்கொண்ட பரஞ்சோதியார் தாம் பாடிய திருவிளையாடற் புராணம், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தில், என்னை இகழ்ந்தனனோ சொல்வடிவாய்நின் இடம்பிரியா இமையப் பாவை தன்னையும் சொற்பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் என்தனக்கு யாது - (திருவிளை :56-10) என்று கூறுகிறார். பாடல் குற்றம் உடையது என்று பாண்டியன் கூறியதால் தனக்கு ஒன்றும் அவமானம் இல்லை என்றும், பெருமானே, பாண்டியன் என்னை இகழவில்லை; பாடலை இகழ்ந்தான் என்றால் ஒன்று சொற்குற்றம் கண்டிருக்க வேண்டும், அல்லது பொருட் குற்றம் என்று கண்டிருக்க வேண்டும். சொல்லிற்குற்றம் இருந்தால் சொல் வடிவமாக உன்னிடம் பிரியாமல் உறையும் இறைவியை இகழ்ந்தான் என்று கருதல் வேண்டும். பொருளிற்குற்றம் கூறியிருப்பின் சொற் பொருளாக இருக்கின்ற உன்னை இகழ்ந்தான் என்று கருதல் வேண்டும். என்னை எங்கே இகழ்ந்தான்'