பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 திருவாசகம் - சில சிந்தனைகள் அன்பு வழியில் செல்பவர்கள் இறைவன் யார் என்பதை ஆராயத் தொடங்குவதில்லை. அதன் எதிராக, அன்பு முதிர்ச்சியால் தம்மை மறந்து அவன் புகழைப் பாடத் தொடங்கிவிடுகின்றனர். இந்த முறையில்தான் போற்றித் திருஅகவல் அமைந்துள்ளது. பிறந்து வளர்ந்துவிட்ட காரணத்தால் ஏதோ எளிதாக இந்நிலையை அடைந்துவிட்டோம் என்ற நினைவு பலருடைய மனத்தில் நிழலாடுகின்றது. கருவாகத் தோன்றுகின்ற நிலையிலிருந்து ஒரு முழுவடிவு பெற்றுக் குழந்தையாக இப்பூமியில் பிறக்கின்றவரை ஏற்படுகின்ற துன்பங்கள் வரிசைப்படுத்திப் பேசப்பெற்றுள்ளன (18-25). பிறந்து வளர்கின்ற நிலையில் எதிர்ப்படும் இடையூறுகளை அடிகளார் விளக்குவது சற்றுப் புதுமையாகவே உள்ளது. பொதுவாகக் கல்வி, செல்வம் என்ற இரண்டும் (3)sGiridssøðr வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதவை என்று வள்ளுவர்முதல் பலரும் கூறியுள்ளனர். ஆனால், அத்தகைய கல்வியைப் பல்கடல் பிழைத்தும்(38) என்றும், செல்வத்தை அல்லல்(89) என்றும் அடிகளார் கூறுவது ஆழ்ந்து சிந்திப்பதற்கு உரியதாகும். உலக வாழ்க்கையில் ஒருவன் சிறப்படைய விரும்பினால் கல்வியும் செல்வமும் மிக இன்றியமையாத தேவைகள் ஆகும். அறிவின் துணைக்கொண்டு வாழப்பெறும் இவ்வுலக வாழ்க்கையில் அவ் அறிவை வளர்க்கும் கல்வி மிக இன்றியமையாதது என்பதில் ஐயமில்லை. அறிவை வளர்க்கும் கல்வி பண்பையோ உணர்வையோ மனித நேயத்தையோ வளர்க்க உதவுவது இல்லை. எனவேதான் கல்வியைப் பல்கடல் என்றும், செல்வத்தை அல்லல்’ என்றும் கூறினார். இத்தனைத் துன்பங்களையும் கடந்து தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகும் நிலையிற்கூட இந்த