பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 திருவாசகம் - சில சிந்தனைகள் ஏனைய மூன்று அகவல்களிலும் காணப்பெறாததும் இந்த அகவலில் காணப்பெறுவதும் ஆகிய புதுமை என்னவென்றால், மானுடம் பாடாத இப்பெருமகனார் தம் காலத்தில் வாழ்ந்த பாண்டி மன்னனைப்பற்றிக் குறிப்பதாகும். நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல் பரகதி அடைந்த பாண்டியனின் பெயரைக்கூட அவர் குறிப்பிடவில்லை. காரணம் இத்தகைய சிறப்புப்பெற்ற பாண்டியன் ஒருவன்தான் உண்டு என்பதனாலாம். ஆன்ம யாத்திரையில் பல்வேறு இடையூறுகளையும் கடந்து முன்னேறும் ஆன்மாவின் குறிக்கோள் யாது என்ற வினா, பல்லாயிரம் ஆண்டுகளாகவே இருந்துவரும் ஒன்றாகும். இப்படி வளர்ந்துவருகின்ற ஆன்மாவின் குறிக்கோள் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி’ அவன் சேவடியைப் போற்றி போற்றி என்று புகல்வதே ஆகும். அதனை வலியுறுத்தவே நூற்றி நாற்பது அடிகளில் போற்றி என்கிறார் அடிகளார். さ @ @