பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 307 அந்தப் பரம்பொருள் மண்ணிடை வந்து நிகழ்த்திய செயல்களை விரிவாகப் பேசுகின்றார். இங்கு ஒரு சிக்கல் தோன்றும். அப் பரம்பொருளை நினைக்கும் பொழுது, அது கற்பனை கடந்தது என்று சொல்லிவிட்டு அடுத்த பாடலில் அது உலகிடை வந்து நிகழ்த்திய நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்துவது மனத்தில் ஏதோ ஒரு நெருடலை உண்டாக்கும். காரணம், எங்கோ உள்ள பரம்பொருள் இங்கு வந்து சில விளையாடல்களை நிகழ்த்தியது என்றால், இடையில் நிற்கும் நாம் யார்? நமக்கும் அதற்கும் என்ன தொடர்பு? என்று தோன்றும் நெருடல்களைப் போக்கக் கீர்த்தித் திருஅகவலின் முதலிரண்டு அடிகள் உதவுகின்றன. ஐந்தெழுத்தின் ஒலிவடிவாக உள்ள அத்திருவடி, பூமியில் வந்து திருவிளையாடல்களை நிகழ்த்திய அத்திருவடி, நம்மினும் வேறுபட்டு எங்கோ இருக்கிறது என்று நினைக்க வேண்டா. அத்திருவடிகள் என்றும் நம்முள்ளேயே உள்ளன என்ற கருத்தைத் தில்லை மூதூர் ஆடிய திருவடி, பல்லுயிர் . எல்லாம் பயின்றனன் ஆகி’ என்ற அத்தொடரில் நினைவூட்டுகிறார். முதல் மூன்று அகவல்களின் முற்பகுதிகளைமட்டும் தனியே எடுத்துச் சிந்தித்தால் அவற்றின் தனிச்சிறப்பு விளக்கும். சிவபுராணத்திலும், திரு அண்டப்பகுதியிலும் அண்ட பேரண்டங்களை எல்லாம் கடந்து நிற்கின்ற நுண்மையான ஒலிவடிவு, பருமையான அண்ட வடிவு என்ற இரண்டு பெரிய வடிவுகள் பேசப்பெறுகின்றன. கீர்த்தித் திருஅகவலில் இந்த ஒலிவடிவும், அந்தப் பருவடிவும் தன்னைச் சுருக்கிக்கொண்டு யானை முதல் எறும்பு ஈறாய பல்வகை உடம்பினுள்ளும் உறைகின்ற உயிர்களுக்கு உயிராய் உள்ளே நிற்கின்றது என்ற கருத்தை