பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 திருவாசகம் - சில சிந்தனைகள் 'பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி’ என்ற அடியில் குறிப்பிடுகின்றார். ஒன்று, மூன்றாம் அகவல்களின் தொடக்கப் பகுதிகள் அவன் பெருமைக்கு ஒர் எல்லை; கீர்த்தித் திருஅகவலின் முதலிரண்டு அடிகள் அவன் கருணைக்கு ஒர் எல்லை. அவனைப்பற்றிய இக் கருத்துக்களை மூன்று பாடல்களின் தொடக்கத்தில் அறிவித்த பின்னர், உயிர்களாகிய நம் கடமை என்ன என்பதை போற்றித் திருஅகவலின் நூற்றுக்கு மேற்பட்ட அடிகளில் போற்றி போற்றி என்று கூறுவதன் மூலம் விளக்கி அருளுகின்றார். - வளர்ச்சியடைந்த மனிதன் கற்காலத்தில் தொடங்கிய தன் நிலையையும், பின்னர் பல நூற்றாண்டுகளில் தானடைந்த வளர்ச்சியையும் திரும்பிப் பார்க்கின்றான். நெருப்பை உண்டாக்குதல், உருளுகின்ற சக்கரங்கள் செய்தல், வேளாண்மை செய்தல், கூர்மையான ஆயுதங்களைச் செய்து போரிடுதல் ஆகிய பலதுறைகளில் மாபெரும் வளர்ச்சி அடைந்துவிட்டமையின், அவனுள் ஓர் அகங்காரம் தோன்றுவது இயல்பு. ஆக்கல், அழித்தல் சக்திகள் தன்பால் உள்ளன என்றும், தான் நினைத்ததைச் செய்யமுடியும் என்றும் இறுமாப்புக்கொள்ளத் தொடங்கி விட்டான். கல்வி, செல்வம் ஆகிய இரண்டும் வளர்ச்சி அடைந்தமையால், தான் முழு நிறைவு பெற்றுவிட்டதாகக் கனவு காணத் தொடங்கினான். மனிதனின் இந்த நிலை தொடரும்பொழுதே அவனுள் ஒர் ஐயம் தோன்றலாயிற்று. புறப்பொருள்களைக் கட்டுப்படுத்தித் தன் அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவரக் கற்றுக்கொண்ட அவன், தன்னுள் இருக்கும் பொறி, புலன்களையும், அவை தொழிற்படுவதற்கு ஏதுவான மனத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை அறிந்தான். எத்துணை முயன்றும் இவை அவன்