பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 309 அதிகாரத்தின் கீழ் வரமறுத்தன. மனத்தைக் கட்டுப் படுத்தும் அக வளர்ச்சி இல்லையானால், இந்தப் புற வளர்ச்சி எந்தப் பயனையும் தாராது என்பதை நாளாவட்டத்தில் அறியத் தொடங்கினான். மனம் மட்டுமன்றி ஐம்பெரும் பூதங்களும் அவற்றின் ஆற்றலும் தன் அதிகார எல்லைக்குள் வரவில்லை என்பதை உணர்ந்த மனிதன், மற்றொன்றையும் கண்டு கொண்டான். தன்னுடைய புற வாழ்வை வளப்படுத்தும் இந்த ஐம்பெரும் பூதங்களும் ஒரு குறிப்பிட்ட நிலையில் அடங்கிப் பணிபுரிவதையும், வாழ்வை வளப்படுத்தும் இதே பூதங்கள் திடீரென்று தம் எல்லைகளை மீறிப் பேரழிவை உண்டாக்குவதையும், அவற்றின் எதிரே, தான் ஒன்றும் செய்ய இயலாது இருப்பதையும் கண்ட மனிதனுக்குப் புதிய ஆராய்ச்சி பிறந்தது. தன் அதிகாரத்திற்கு அப்பால் புறத்தே நிற்கும் ஐம்பெரும் பூதங்களும், அகத்தே நிற்கும் ஐம்பொறிகள், புலன்கள், மனம் ஆகியனவும் தன் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டுமானால் யாருடைய துணையை நாடுவது என்ற நீண்டகாலச் சிந்தனைக்குப் பின் மனிதன் ஒரு தெளிவை அடைந்தான். அதனைத்தான் அடிகளார், ‘தெய்வம் என்பாேர் சித்தம் உண்டாகி முனிவிலாதது ஓர் பொருளது கருதலும்’ என்று பேசுகின்றார். இந்த உண்மையை உணர்ந்தவுடன் அந்தத் தெய்வத்தைத் திருப்திப்படுத்தித் தனக்கு உதவுமாறு செய்வதற்காக யாகங்களைச் செய்தான்; கோயில்களைக் கட்டினான்; பெரிய பெரிய நித்திய, நைமித்திய பூசைகளை நிறுவினான். பலகாலம் இதனைச் செய்தும் ஏனோ அவன் மனம் அமைதி அடையவில்லை. அப்படியானால் இத் தெய்வம் தனக்கு உதவுவதற்கு மேலும் என்ன செய்யவேண்டும் என்ற ஆராய்ச்சியில் புகுந்தான். ஐம்பெரும் பூதங்களும் இறைவனுடைய'