பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 23 என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார். பரஞ்சோதியை அடுத்து அபிராமிபட்டர் தாம் பாடிய அபிராமி அந்தாதியில், சொல்லும் பொருளும் எனநடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே (அபி.அந் , 28) என்று கூறிச்செல்வதும் சிந்திப்பதற்குரியது. சைவர்களைப் பொறுத்தமட்டில் இறைவன், இறைவி என்ற இருவரும் உருவ அளவில் இருவரே தவிரப் பொருள் ஒன்றே என்று கருதினர். ஒரே பொருள் தொழிற்படும் போது சக்தி என்றும், தொழிற்படாமல் அமைதியாக இருக்கும்போது சிவம் என்றும் கூறப்பட்டது. தொழிற்படும் ஆற்றல் (சக்தி) சிவத்துள் அடங்கி இருப்பதாகும். இன்று எல்லாப் பொருளிலும் இரண்டு வகை ஆற்றல்கள் உண்டு என்று விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது. தொழிற்படாது இருக்கும்போது அதனுள் அடங்கியிருக்கும் ஆற்றல் அடங்கு ஆற்றல் (potential energy) என்றும், அது தொழிற்படும்போது வெளிப்படுவது இயங்கு ஆற்றல் (kinetic energy) என்றும் சொல்லப்பெறும். இப்பேருண் மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட தமிழர் சிவசக்தி சொரூபமாக இறைவனைக் கருதினர். வைணவர்களும்கூட பெருமாள் மார்பில் பெருமாட்டி உறைகின்றாள் என்று கூறுவதன் மூலம் இக்கருத்தைக் கூறினர். நமச்சிவாய என்ற சொல்லின் ஒலி வடிவம், ஆற்றலின் சேர்க்கையாகும். ந, ம, என்று ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்கும்போது ஒவ்வோர் எழுத்துக்குமுரிய அதிர்வுகள் (vibrations) வெளிப்படுகின்றன. 'ந'வுக்குள்ள அதிர்வும், ம’. வுக்குள்ள அதிர்வும், அப்படியே சி, வா, ய என்ற