பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 311 மனமும் உள்ளேதானே இருக்கின்றது. அப்படி இருக்க மனம் ஏன் அவன்பால் செல்லவில்லை? மனத்தைச் செலுத்த வேண்டுமென்று நினைத்தாற்கூட அது முடியாமற் போவது ஏன் என்ற வினாத் தோன்றியவுடன், பலகாலம் சிந்தித்த மனிதன் ஓர் உண்மையைக் கண்டான். தன் உள்ளே ஒளிவடிவாய் நிற்கும் இறைவன் சித்தத்தின் மேற்பகுதி அடிப்பகுதி ஆகியவற்றைக் கடந்து, பஞ்ச கோசங்களையும் கடந்து, ஆன்மாவோடு ஒன்றி அதன் உள்ளே இருக்கின்றான். ஆதலால், இவற்றுக்கெல்லாம் வெளியே நிற்கும் மனம் எளிதாக அவனைப் பற்றிவிட முடியாது. அப்படியே அந்த மனம் முயன்றாலும் இவற்றை எல்லாம் கடந்து இறைவனை அடைய முடியாது. அப்படி அடையும் ஆற்றல் தன் மனத்திடம் இல்லை என்பதைக் கண்ட மனிதனுக்கு இறுதியாக ஒரு வழி கிடைத்தது. குறைந்த ஆற்றலுடைய தன் மனத்தை உள்ளே இருக்கும் இறைவனிடம் செலுத்துவதைவிட, அந்த இறைவனை வணங்கி, அவனே வெளியே வந்து, தன் மனத்தை அவன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மனிதன் கண்டான். சுருங்கக் கூறினால் மனம் அவனை வணங்கக்கூட அவன்தான் அருள்செய்ய வேண்டும், என்பதைக் கண்டான். இதனைத்தான் அடிகளார் இரத்தினச் சுருக்கமாக, உபநிடத வாக்கியம்போல, திருக்குறளைப்போல அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று கூறிவிடுகிறார். இறைவன் திருப்பெயரை ஓயாமற் சொல்வதன் நோக்கம் என்ன? ஐந்தெழுத்தே ஆயினும் அதற்கு எவ்வாறு இவ்வளவு சக்தி வந்தது என்ற வினாவை மனிதன் கேட்கத் தொடங்கினான். இந்த நிலையில் ஒலிகளைப்பற்றியும் அவற்றின் ஆற்றல்கள்பற்றியும் அவன் அறிந்திருந்த பல செய்திகள் அவனுக்கு உதவி புரிந்தன. ஒலிகள் பேராற்றல் வாய்ந்தவை. ஒவ்வொரு தனி எழுத்திற்கும் ஓர் ஒலி உண்டு. இரண்டு எழுத்துக்கள்