பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3岱2 * திருவாசகம் - சில சிந்தனைகள் சேரும்பொழுது ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள அதிர்வுகள்(frequency) ஒன்று கூடுகின்றன. இதிலிருந்து மூன்றாவதாக ஓர் அதிர்வு தோன்றுகிறது. அந்த மூன்றாவது அதிர்வு, இரண்டு எழுத்துக்களின் தனித்தனி அதிர்வுகளைவிட அதிகச் சக்தி வாய்ந்தது. அதேபோல, ஐந்தெழுத்தின் சேர்க்கையில் தோன்றும் ஒலி அலைகள், மாபெரும் சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன என்பதை நம்முன்னோர் கண்டனர். எழுத்துக்களின் வைப்பு முறையை மாற்றுவதால் புதிய புதிய ஆற்றலைப் பெற முடியும் என்ற நுணுக்கத்தையும் நம் முன்னோர் என்றோ அறிந்திருந்தனர். 'நமசிவாய' என்ற எழுத்துக்களின் சேர்க்கையை ஸ்தூல பஞ்சாட்சரம் என்றும், சிவாயநம’ என்று கூறுவதைச் சூக்கும பஞ்சாட்சரம் என்றும், 'சிவாயசிவ’ என்பதை அதிசூக்கும பஞ்சாட்சரம் என்றும் பிரித்துக் கூறியுள்ளனர். இவ்வாறு செய்வதால் இவை ஒன்றைவிட ஒன்று ஆற்றல் மிகுந்து விளங்குகின்றன என்பதையும் அவர்கள் கண்டனர். என்றாலும் அவரவர்கள் பக்குவநிலைக்கு ஏற்ப, படிப்படியாக இந்த முறையைக் கையாளவேண்டுமே தவிரத் திடீரென்று இரண்டாவது மூன்றாவது நிலைகளுக்குப் போவது சரியில்லை என்றும் பெரியோர் கூறியுள்ளனர். எட்டெழுத்து மந்திரம், ஆறெழுத்து மந்திரம் ஆகியவற்றிற்கும் இதுபோன்ற ஆற்றல் உண்டு என்பதை அறிதல் வேண்டும். எனவே, இம்மந்திரங்களை ஓயாது திரும்பத் திரும்பச் சொல்வதால் அவற்றில் தோன்றும் அதிர்வுகள் ஒன்றுதிரண்டு நம் வினையை அழிக்கின்றன. இதனையே அடிகளார் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை, முந்தை வினைமுழுவதும் ஒய உரைப்பன் யான்' என்று பேசுகின்றார். இங்குச் சிவபுராணம் என்றது இறைவனுடைய பல்வேறு பெயர்களையே ஆகும். ன்றுகூட ஹங்ெ ந்தையோ ஏனைய எட்டெழுத் [s]! ஐநolதழுத ([{}{2ígiI முதலியவற்றையோ உச்சரிக்கின்றவர்கள் பலர், 108 அல்லது