பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 313 1008 என்று கணக்கு வைத்துக்கொண்டு அது எப்போது முடிவுறும் என்ற நினைவிலேயே ஜப மாலையை உருட்டுகின்றனர். இப்படி மந்திரங்களை உச்சரித்தல் அதற்குரிய முழுப்பயனையும் தாராது. இதனை மனத்துட் கொண்ட அடிகளார் மனித சமுதாயத்திற்கு ஒரு பாடம் கற்பிக்கமுயல்கின்றார். 'சிவபுராணம் தன்னை உரைப்பன்' என்று கூறாமல், 'சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை உரைப்பன்' என்று கூறுகின்றார். சிவபுராணத்திற்கு” மோனையாக சிந்தை” என்ற சொல்லை அவர் கையாளவில்லை. காரணம் எதுகை, மோனைகளைக் கடந்தவர் அவர் மகிழ்ச்சி என்பது புறமனம், அகமனம், சிந்தையின் மேற்பகுதி, சிந்தையின் அடிப்பகுதி ஆகிய நான்கு இடங்களிலும் தோன்றலாம். சிந்தை மகிழ’ என்று அடிகளார் கூறியதால் புற, அக மனங்களில் தோன்றும் மகிழ்ச்சியை அவர் கூறவில்லை. காரணம், இம் மகிழ்ச்சி அற்பமானது; நிலையில்லாதது; நிலையில்லாத பொருள்கள்பற்றியே தோன்றுவது. இவற்றை எல்லாம் கடந்து நிற்கும் சிந்தையில் தோன்றும் மகிழ்ச்சி நிலையானது; நிலையான பொருள்பற்றியே தோன்றுவது. எனவே, முந்தை வினைகள் ஒய வேண்டுமானால் சிவபுராணத்தை உரைத்தல் வேண்டும். வாயால்மட்டும் உரைத்துப் பயனில்லை; மன மகிழ்ச்சியோடு உரைத்தும் பயன் இல்லை, அப்பெயர்களை உச்சரிக்கும்போது சிந்தையில் மகிழ்ச்சி தோன்றவேண்டும். அவ்வாறு உரைத்தால் முந்தை வினைகள் தாமே ஒய்ந்துவிடும் என்ற புதிய முடிபை அடிகளார் அருளிச் செய்கின்றார். சிவபுராணம் முழுவதும் அடிகளாரின் சிவானுபவத்தின் பின்னர் பாடப்பெற்றதே ஆயினும், ஒன்றிரண்டு இடங்கள் தவிர ஏனைய பகுதிகள் அனைத்தும் பொதுவாகச் சொல்லப்பட்டவையே ஆகும். அனுபவத்தில் தோய்ந்து பாடினாலும், தாம் தோய்வதற்கு உரிய வாய்ப்பு, சந்தர்ப்பம் என்பவை அவருடைய 21