பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 திருவாசகம் - சில சிந்தனைகள் மனத்திடையே தோன்றுகின்றன. அதன் பயனாகவே 'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே’ என்ற சொற்கள் அமைந்துள்ளன. மதுரையில் இருந்து குதிரை வாங்கப் புறப்படும்போது இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் என்று அவர் கனவிலும் கருதவில்லை. ஆகவே தான், குதிரை வாங்கும் குறிக்கோளுடன், அமைச்சருக்கு உரிய ஆடம்பரங்களுடன் சென்று கொண்டிருந்த தம்மை ஈர்த்து ஆட்கொண்டான்' என்று பேசுகிறார். வழியோடு போகின்றவரை ஈர்த்துச் சிறப்பை வழங்குதல் தந்தைமார்கள் தம் பிள்ளைகட்குச் செய்கின்ற செயல் ஆதலின் 'எந்தை' என்றார். தந்தை என்று கூறியவுடன் இறைவனின் கற்பனைக்கடங்காத உயர்வுக்கு இழுக்கு வந்துவிடுமோ என்று கருதினார்போலும்! அதனாலேயே அடுத்துப் பெருமானே’ என்றார். இந்த நினைவு வந்த உடன் இவ்வாறு அருள் செய்தவர் யார்? என்ற எண்ணம் வருகிறது. அதற்கு விடையாக நிலந்தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி’ என்றார். கற்பனை கட்ந்து, நாம, ரூபம் கடந்து நிற்கின்ற ஒருவன் தம்பொருட்டாக நிலந்தன்மேல் வந்தருளினான்; வந்ததோடு நில்லாமல் தம்மைக் கரையேற்றுகின்ற திருவடிகளைக் காட்டினான் என்ற நினைவு வந்தவுடன் 'பால்நினைந் துட்டும் தாயின் நினைவு வருகிறது. எனவே தாயிற் சிறந்த தயாவான தத்துவனே என்று பாடுகின்றார். - அடுத்து உள்ள கீர்த்தித் திருஅகவலில் இறைவனின் எளிவந்த தன்மையைப் பாடிக்கொண்டு வரும்பொழுது, குருவாக வந்த பெருமான் சொல்லிச் சென்றது நினைவுக்கு வருகிறது. அடியார் கூட்டத்தின் இடையே அமர்ந்திருந்த பெருமான் அடிகளாருக்கு தீட்சைகள் முதலியன செய்து கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என்று கூறி மறைந்தார். இதனைக் குருநாதர் சொல்லாமல்