பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 315’ மறைந்திருப்பின், தம்முடைய அனுபவம் கைவிட்டுப் போனபொழுது அடிகளார் உயிர்நீத்திருப்பார். அத்தகைய, ஒரு கொடுமை நிகழாமல் இருக்கவே குருநாதர் கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என்று ஆணையிட்டார். இறந்துபட்ட கோவலன் உயிருடன் எழுந்து கண்ணகியைப் பார்த்து இருந்தைக்க என்று கூறியது, கண்ணகியை பின்னரும் வாழ்ந்து வழக்குரைக்கத் தூண்டியதுபோல, குருநாதரின் பொதுவினில் வருக என்ற ஆணை அடிகளாரைத் தொடர்ந்து வாழுமாறு செய்ததுடன் தில்லைக்குச் செல்லவேண்டுமென்ற அவாவையும் தூண்டிற்று என்க. இந் நிகழ்ச்சி நடைபெற்றபொழுது நூற்றுக் கணக்கானவர் குழுமி இருந்திருப்பரே. அவர்களுள் ஒரு சிலருக்காவது இந்த அனுபவத்தின் ஒருபகுதி கிடைத்திருக்க வேண்டுமே என்று நினைப்பவர்களுக்கு விடை கூறுவதுபோலத் தம் கண்ணெதிர்ே நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கீர்த்தித் திருஅகவலின் 'எய்த வந்திலாதார் எளியிற் பாயவும் என்பது முதலாக பாதம் எய்தினர் பாதம் எய்தவும் என்பதுவரை(l32-187) உள்ள பகுதியில் அடிகளார் விளக்குகின்றார். : நான்கு அகவல்களையும். படிக்கும்பொழுது அடிகளாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அகச் சான்றுகளாக பலவிடங்களிலும் வருவதைக் காண்கிறோம். அடிகளார் தம் வாழ்க்கை வரலாற்றை வரிசையாகக் கூற முற்படவில்லை. அவருடைய ஆழ்மனத்தில் திடீர் திடீரென்று தோன்றும் எண்ணங்களின் வடிவே இந்த அகச்சான்றுப் பகுதிகளாகும். இவற்றை வைத்துக்கொண்டு எது முன்னர் நிகழ்ந்தது, எது பின்னர் நிகழ்ந்தது என்று கால வரையறை செய்வதும், எதை முன்னர்ப் பாடினார், எதைப் பின்னர்ப் பாடினார் என்று வரிசைப்படுத்துவதும் சரி என்று தோன்றவில்லை. பிற்காலத்தில் வந்தவர்கள்