பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுன்ர 317 அகவல்களில் மூன்றாவதாக இருப்பது திரு அண்டப் பகுதியாகும். இதில் காணப்பெறும் சில அடிகள் என்ன சிந்தனையைத் துரண்டுகின்றன என்பதை அந்தப் பகுதிகளிலேயே எழுதியுள்ளேன். இவ் அகவலில் காணப்பெறும் சில வாலாயமான சொற்களுக்கு இன்று பலராலும் பொருள்கொள்ளப் பெறும் அதே முறையில் இங்கும் பொருள்கொள்வதா என்ற வினாத் தோன்றத்தான் செய்கிறது. உதாரணமாக, 'அறுவகை சமயத்து அறுவகையோர்க்கும், வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி, கீடம் புரையும் கிழவோன்' என்ற அடிகள் எளிதில் பொருள்கொள்ளும் முறையில் அமையவில்லை என்பது உண்மை. அறுவகைச் சமயத்தோர் என்பதற்கு, இன்று பலரும் அறிந்த, அகச்சமயங்கள் என்று பொருள் கொள்ளாமல், புறச் சமயங்களையே இச்சொற்கள் குறிப்பதாகக் கருதி எழுதியுள்ளனர். அவ்வாறு கூறுவதில் சில சங்கடங்கள் ஏற்படுகின்றன. பெளத்தரும், சமணரும் கடவுட்பொருளை ஏற்காதவர்கள். அப்படி இருக்க அறுவகைச் சமயம் என்ற தொடருக்கு, 'அருகர், பெளத்தர் முதலான புறந் சமயவாதிகள் என்று பொருள்கொள்ளுவது பொருந்தாது என்பதை அறிதல் வேண்டும். இவ்வாறு இவர்கள் பொருள்கொள்வதற்கு ஒரு காரணமுண்டு. அறுவகைச் சமயம் என்ற சொல்லுக்கு இன்று பலரும் அறிந்த சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், காணாபத்தியம், ஸெளரம் என்று பொருள்கொண்டால், வீடுபேறாய் நின்ற கிழவோன்’ என்ற பகுதிக்கு இச் சைவப் பெருமக்களால் பொருள்கூற முடியாமற் போய்விடும். அதனாலேயே அகச்சமயங்கள் ஆறையும் விட்டுவிட்டுப் புறச்சமயங்கள் ஆறையும் பொருளாகக் கொண்டனர். இவர்கள் கருத்துப்படி பொருள் கொண்டால் அருகர், பெளத்தர் ஆகியோருக்கும் வீடுபேறாய் நின்ற கிழவோன் என்று பொருள்கொள்ள நேரிடும்.