பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 319 வைணவ, சாக்த ஆகமங்கள்பற்றி, அடிகளார். பேச்சுவதாகப் பொருள் கூறியுள்ளனர். அவ்வாறு பொருள்கொள்ள அவர்கள் விருப்பத்தைத் தவிரப் பாடலில் எவ்விதக் குறிப்போ, சொல்லோ இல்லை. அவர்கள் குறிப்பிடும் சைவ ஆகமங்கள், எத்தனை என்பதில் இன்றும் கருத்து வேறுபாடு இருந்துவருகிறது. இன்று கிடைக்கும் ஆகமங்களுள்ளும் வேறுபாடுகள் உள்ளன. థ}శ్రీశf ஆகமங்களின்படி கருவறைக்கு முன்னுள்ள அர்த்த மண்டபத்திற்கு வெளியேதான் பெண்கள் நிற்கவேண்டும். பூசனை முதலியவற்றில் பங்குகொள்ள இப்பெண்களுக்கு (சிவாச்சாரியரின் குடும்பப் பெண்கள் உட்பட) எவ்வித உரிமையும் இல்லை. ஆனால், 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காழிப்பிள்ளையாரின் நண்பராகிய திருநீலநக்கர்’ வரலாறு ஆகமங்களுக்கு முரண்பட்டுள்ளது என்பதைப் பெரியபுராணம் கூறுகின்றது. கணவர் வழிபாடு செய்யும் பொழுது திருநீலநக்கரின் மனைவியார் சிவலிங்கத்தின் பக்கத்திலேயே நின்றதோடு மட்டும் அல்லாமல் சிவலிங்கத்தின்மேல் வாயால் ஊதியும் விட்டார். திருப்பனந்தாளில் இறைவனுக்கு அபிடேகம் செய்தவர் ஒரு பெண்ணரசியார் என்பதும் அவருடைய இக்கட்டைப் போக்குவதற்கு இறைவனின் சிவலிங்கத் திருமேனி சாய்ந்து கொடுத்தது என்பதும் இந் நாட்டு வரலாறாகும். எனவே, சைவ ஆகமங்கள் தவிர என்று சைவப்பெரியோர் உரைகறுவது பொருத்தமுடையதாகத் தெரியவில்லை. வேத விருத்தம்(முரண்பாடானது ஆகமம் என்று கூறும் வைதிகர்கள், ஆகமங்களை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால், இந்த ஆகமவாதிகள் என்ன காரணத்தாலோ வேதத்தை விடாமல் பற்றிக்கொண்டு உள்ளனர். உருவ வழிபாட்டின் விரிவையும் விதிகளையும் கூறும் ஆகம வழிநின்று வழிபாடு செய்பவர்கள், ஏதோ இறைவனை நேரே கண்டுவிட்டதாக இறுமாந்திருத்தல் கூடும். தாங்கள் செய்யும் பூசனை இறைவனை நேரே