பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 திருவாசகம் - சில சிந்தனைகள் சென்று அடைவதாக இவர்களிற் சிலர் கருதியிருத்தல் கூடும். இவற்றை எல்லாம் அடிகளார் நேரிடையாகக் கண்டிருத்தல் கூடும். எனவே, வைதிகர்கள், ஆகமவாதிகள் என்ற இருவரையும் ஒரே தட்டில் வைத்து, இவர்கள் இருவருமே தன்னைக் காணமுடியாதபடி இறைவன் ஒளித்துக்கொள்கிறான் என்று அடிகளார் கூறுகிறார். எவ்வளவு விளக்கம் கூறினாலும் அடிகளாரின் கருத்து என்ன என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்பதே என்முடிவாகும். அண்டப்பகுதியின் உயிர்நாடியாகவுள்ள ஒன்றை பாடலில் காணப்பெறும் முன்னும் பின்னுமாகிய சில அடிகளைக் கொண்டுசுட்டுச் செய்தவன் மூலம் ஓரளவு விளங்கிக்கொள்ள முடியும். இறைவன், மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் மின்ஒளி கொண்ட பொன்ஒளி திகழ (124-125) ஒளிவடிவாக விளங்குகின்றான். ஆனால் இந்த ஒளிவடிவம் திசைமுகன் தேட முயன்றபொழுது ஒளித்துக் கொண்டது (125). அம்மட்டோடு இல்லை, முயன்றவர்க்கு ஒளித்தும் (127), உறைப்பவர்க்கு ஒளித்தும்(129, வருந்தினர்க்கு ஒளித்தும்(180), அவ்வயின் ஒளித்தும்(32), வாள் நுதல் பெண் என ஒளித்தும்(135), அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் (138), உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும்(139), பற்றுமுற்று ஒளித்தும்(145) விளையாடி ஒளிக்கும் சோரன், மேலே கூறிய அத்தனை பேருக்கும் ஏன் ஒளித்துக் கொண்டான்? ஒளிந்திருப்பவனைத் தேடிச் செல்பவரிடம் விளக்கு ஒன்று இருத்தல் இன்றியமையாதது. இத்தனைபேரிடமும், ஒளித்து நிற்கும் சோரனைக் காண ஒரு குறிப்பிட்ட ஒளி பொருந்திய விளக்குத் தேவை. அந்த விளக்கு இருந்தால், அவனை எளிதாகக் கண்டுவிடலாம். அந்த ஒளி