பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருவாசகம் - சில சிந்தனைகள் எழுத்துக்களின் அதிர்வுகளும் ஒன்றுசேரும்போது ஒரு புதிய அதிர்வு தோன்றுகிறது; அந்த அதிர்வின் வடிவமே இறை வடிவமாகும். ஆக, 'நமச்சிவாய வாழ்க’ என்று அடிகளார் கூறும்போது இறைவனுடைய ஒலி வடிவான சொரூபத்தைக் கூறுகிறார் என்று ஏற்றுக்கொள்ளலாம். எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழித்து, அருளி, மறைக்கின்ற பரம்பொருள் தோற்றம், இறுதி இல்லாதது என்பது சமயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட உண்மை ஆகும். அப்படிப்பட்ட ஒரு பொருளை வாழ்க’ என்று கூறுவது பொருத்தம் உடையதா என்று நினைத்துப் பார்த்தால் அடிகளாரே அதற்கு விடை சொல்லி விடுகிறார். வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் (திருவாச :5-16) என்று அடிகளார் கூறுவதன் மூலம் உயிர்கள் இறைவனை வாழ்த்துவதால் இறைவனுக்கு எவ்வித நன்மையோ, தீமையோ இல்லை; வாழ்த்துகின்ற உயிர்கள் தாம் வாழ வழிசெய்துகொள்கின்ற ஒரு வழியே இறைவனை வாழ்த்துவதாகும் என்பது அறியப்படுகிறது. - எல்லாப் படைப்பும் ஒலியில் இருந்தே படைக்கப் படுகிறது என்பது சைவர்கள் கொள்கை, கூத்தப் பெருமான் இடக்கையில் வைத்திருக்கும் டமருகம் என்று அழைக்கப் பெறும் உடுக்கை, ஒலியிலிருந்து படைப்பு நடைபெறுகிறது என்பதைக் குறிப்பதாகும் என்ற கருத்தை, தோற்றம் துடி (உடுக்கை) அ (உண்மை விளக்கம்-36) என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது. எனவே, சுத்த மாயையைக் கடந்து நிற்கின்ற பரம்பொருள் ஆதி நாத சொரூபமாய் (primordial sound) அமைந்துள்ளான்.