பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 321 விளக்கிற்குப் பக்தி' என்று வடமொழியிலும், "இறை அன்பு’ என்று தமிழிலும் பெயருண்டு. மேலே கூறப்பெற்றவர் அனைவரும் எத்தனையோ பெரு முயற்சிகளைச் செய்து அவனைத் தேடமுயன்றார்களே தவிர, இந்த ஒளிவிளக்கைக் கையில் ஏந்தவில்லை. அதனாலேயே அவன் ஒளித்துக் கொண்டான். இத்தகையவனைப் பிடித்துக்கொள்ள ஒர் அருமையான வழியை அடிகளார் கூறியுள்ளார். நம்மால் தேடப்படும் பொருள், சித்தமும் செல்லாத தூரத்தில்(4) உள்ளது. அவனை எப்படிப் பற்றுவது? சித்தமும் செல்லாத் துரத்தில் இருப்பவனைச் சென்று பற்றுவது என்பது இயலாத காரியம். அப்படியானால், வேறு வழியென்ன? அடுத்த அடியில் அடிகளார் தம் அனுபவத்தாற் கண்ட வழியை மிக அழகாக எடுத்து உரைக்கின்றார். நீ தேடிச் சென்றால் அவன் ஒளித்துக்கொள்வான், அன்றியும் சித்தமும் செல்லாத் துரத்தில் உள்ளான். அவனைத் தேடிச் செல்லும் முயற்சியை விட்டுவிட்டு இருந்த இடத்திலேயே ஒரு வலையை விரிப்பாயாக. அந்த வலை பக்தி' என்னும் ஒளிமயமான வலையாகும். அந்த ஒளி வலையை விரித்துவிட்டு அமைதியாக இருப்பாயாக. மேலே கூறிய அத்தனை பேருக்கும் ஒளித்து நின்றவன், தானே வந்து உன்னுடைய பக்தி வலைக்குள் அகப்பட்டுக் கொள்வான் (படுவோன்-42 என்று முடிக்கின்றார். நூற்றொரு கோடியின் மேற்பட விரிகின்ற(4) இந்த அண்டமும், சிறியவாகப் பெரியோனாய் நிற்கும்(6) அவன் என்று மருள வேண்டா. அவன் பக்தி வலையில் படுவோன் என்பதை அறிக என்கிறார் அடிகளார். சைவம், வைணவம் ஆகிய இரண்டிலும், ஆயிரக் கணக்கான இறையன்புப் பாடல்கள் தமிழில் உண்டு