பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 - திருவாசகம் - சில சிந்தனைகள் என்பதும், பக்திப் பாடல்கள் தமிழில் உள்ளதுபோல வடமொழி முதலிய வேறு எந்த மொழியிலும் இல்லை என்பதும் அறிஞர்கள் கண்ட முடிபாகும். தமிழில் உள்ள இத்தனை ஆயிரம் பாடல்களிலும் இறைவன் புகழ் பேசப் பெற்றுள்ளது என்பது உண்மைதான். பக்திப் பரவசத்தால் அடியார்கள் உருகிப் பாடி உள்ளனர் என்பதும் உண்மை தான். இவ் அடியார்களிற் பலரும் இறை அனுபவத்தைப் பெற்றுத் துய்த்தவர்கள் என்பதிலும் ஐயமில்லை. தாங்கள் பெற்று அனுபவித்த இறை அனுபவத்தை, அந்த அனுபவம் எவ்வாறு இருந்தது என்பதை, அந்த அனுபவம் தங்கள் உடலை, மனத்தை, உள்ளத்தை எவ்வாறு தாக்கிற்று என்பதை இவர்களில் ஒருவர் தவிர யாரும் விரிவாகக் கூறவில்லை என்பது தேற்றம். அந்த ஒருவர் எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிவாசகரே ஆவார். அடிகளாரைப் போன்று இறை அனுபவத்தை முழுவதுமாகப்பெற்ற ஒருவருக்கு, இரண்டுவகை மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒன்று புறத்தே நிகழும் மாற்றம்; மற்றது . அகத்தே நிகழும் மாற்றம். இறை அனுபவத்தில் எந்நேரமும் தோய்ந்துநிற்கும் இவர்களுக்கு, பகல் இரவு வேறுபாடோ, எதிரே உள்ளவர்களை இனங்காணும் வேறுபாடோ, தத்தம் உடலிலுள்ள உடை வேறுபாடோ புலனாவதில்லை. சதா காலமும் ஆடியும், அலறியும், சிரித்தும் சேய்போல் திரியும் இவர்களைப் பார்த்து, உலகம் பயித்தியக்காரர்கள்’ என்று நகையாடி நிற்கும். அவருடைய நகைப்பை இப்பெருமக்கள் தாம் அணியும் நகையாகவே கொள்கின்றனர். இப் புறவேறுபாடு ஒருபுறம் நிற்க, இறையுணர்வு என்பது புறமனம், அகமணம், சித்தத்தின் மேற்பகுதி, சித்தத்தின் அடிப்பகுதி ஆகியவற்றை நிறைத்து அதன் பயனாக இவர்களுடைய ஐம்பொறிகளையும்,. புலன்