பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 323 களையும் தன்வயப்படுத்திக் கொள்கிறது. தாம் என்ற நினைவு இவர்கள்பால் இல்லை. அதனால் இறை அனுபவத்தில் இவர்கள் அனைவரும் பூரணமாக மூழ்கியவர்கள் என்பதிலும் ஐயமில்லை. அனுபவ நிலையிலிருந்து மீளும்பொழுது தாம் பெற்றிருந்த அனுவத்தைத் திரும்பிப் பார்க்கும் வாய்ப்பு, அந்த அனுபவத்தை ஆராய்ந்து அறியும் வாய்ப்பு, அதனை எடுத்து விதந்துரைக்கும் வாய்ப்பு என்பவை தமிழக அடியார்களுள் மணிவாசகரைப்போல் ஏனையோர்க்கு அமையவில்லை. உதாரணமாக ஒன்றைக் காணலாம். திருப் பெருந்துறையில் குருநாதரைக் காண்கின்றவரை, பாண்டிய அரசின் அமைச்சராக இருந்த ஒருவர் எத்தனையோ சுக, துக்கங்களை அனுபவத்திருப்பார். அரசின் மிக உயர்ந்த பதவியிலிருந்த ஒருவர், நல்ல பக்தனாகிய அந்த அரசனின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் உரியரான ஒருவர், தம் ஒருவரையே நம்பிக் குதிரைகளைத் தரம்பார்த்து வாங்க அரசரால் வேண்டிக்கொள்ளப்பெற்ற ஒருவர் மகிழ்ச்சிக் கடலின் எல்லையைக் கண்டிருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தம் புலமை நயத்தால் திருச்சிற்றம்பலக் கோவையார் பாடிய இந்த அமைச்சருக்கு சிவ பக்தியும் நிறைந்து இருந்திருக்க வேண்டும். அந்தச் சிவ பக்தியின் காரணமாகத் தோன்றிய மன அமைதி, உள்ளார்ந்த மகிழ்ச்சி என்பவற்றையும் அவர் நன்கு அனுபவத்திருக்க வேண்டும். மகிழ்ச்சியும் இன்பமும் உடலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நன்கு அனுபவித்த ஒருவருக்கு, இதுவரை கற்பனையிலும் காணாத ஓர் அனுபவம் திருப்பெருந்துறையில் சித்திக்கின்றது. வழியில் யாரோ ஒருவரைச் சந்திக்கப் போகிறோம் என்றோ தாம் அறியாப் பதத்தை, அவர் நல்கப் போகிறார் என்ற்ோ திருவாதவூரர் கருதவும் இல்லை; எதிர்பார்க்கவும்