பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 திருவாசகம் - சில சிந்தனைகள் இல்லை. ஆலவாய்ச் சொக்கனை இலிங்க வடிவில் கண்டு வழிபட்டதன்றி, அதே சொக்கன் மானிட உருவந்தாங்கி வருவான் என்றோ, நிலத்தில் அவன் திருவடிகள் தோயும் என்றோ அவர் எதிர்பார்க்கவே இல்லை. அமைச்சராக இருந்த ஒருவர், நல்லவர்-தீயவர், பெரியவர்-சிறியவர், துறவி-இல்லறத்தார் ஆகிய பலருடனும் தனித்தனியே எதிரே இருந்து உரையாடவேண்டிய பொறுப்பில் இருந்துள்ளார். எதிரே உள்ளவர்களின் மனத்தில் தோன்றும் அதிர்வுகள் எப்படித் தம்மைப் பாதிக்கின்றன என்பதை நன்கு அறிந்தவர் இந்த அமைச்சர். - அடியார் குழாத்திடையே ஒரு குரு அமர்ந்திருக்கிறார்; அந்தக் குரு தம்மைப் பார்க்கவோ, புன்முறுவல் செய்யவோ, வருக என்று அழைக்கவோ இல்லை. ஆனாலும் என்ன? குருவினிடம் தோன்றிய அதிர்வுகள் குதிரைமீதிருந்த அமைச்சரைக் கீழே இறங்குமாறு செய்கின்றது; குருவினிடம் வருமாறு ஈர்க்கின்றது. அமைச்சருக்குரிய ஆடைகளுடனேயே குருவினிடம் செல்கிறார் அமைச்சர். அரச்னையும், ஆலவாய்ச் சொக்கனையும் தவிர வேறு யாரையும் வணங்கி அறியாத அமைச்சர், தம்மை மறந்து குருநாதரின் திருவடிகளில் வீழ்கின்றார். குருநாதர், கையால் வருடிக்கொடுத்து, அடுத்து, தம் திருவடியை அமைச்சரின் தலைமேல் வைக்கின்றார். இத்துணை நிகழ்ச்சிகளும் ஒருசில விநாடி நேரத்தில் நிகழ்ந்துவிடுகின்றன. அமைச்சரின் உள்ளத்தில் ஏதோ ஒன்று குபுகுபு என்று பொங்குகின்றது. பொங்கிய அந்த ஒன்று இருதயத்தைத் தொட்டு, குருதியிற் கலந்து, இரத்த நாளங்கள் தோறும் பீறிட்டுப் பாய்கின்றது. இதற்கு முன்னர், அவர் அனுபவித்த இன்பம், மகிழ்ச்சி என்பவை புறமணத்தின் ஒரு பகுதியில் தோன்றி மறைந்தனவே தவிர, எந்த ஒரு மகிழ்ச்சியும் உடல் முழுவதும் பரவுகின்ற நிலையை அவர் அனுபவித்தது