பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 325 இல்லை. புதிய அனுபவத்தில் ஆட்பட்டிருந்த அடிகளாருக்கு நேரம், காலம் என்பதுபற்றிய சிந்தனையே இல்லை. சாதாரண மகிழ்ச்சியில் ஈடுபடுபவர்கட்ட, கண்ணை முடிக்கொள்வது இயல்பு. பேரானந்தத்தில் மூழ்கிய அடிகளார் தம்முடைய பொறிகள் ஐந்தினையும் குருவினிடத்தேயே செலுத்துகின்றார். ஐந்து பேர்அறிவும் கண்களே கொண்டதால் கண்கள் தாமாகவே மூடிக் கொள்கின்றன. எத்துணை நாழிகை இந்நிலை நீடித்தது என்று தெரியாது. மெள்ளக் கண்களைத் திறக்கின்றார். எதிரே குருவும் இல்லை, சீடர்களும் இல்லை. பேரானந்தத்தில் மூழ்கியிருந்த அவருக்கு, மலையிலிருந்து உருட்டிவிடப்பட்டதுபோன்ற அதிர்ச்சி ஏற்படுகிறது. தம்மை இங்கு ஒழித்து குரு போயினார் என்பதை அறிந்தவுடன் ஆறாத் துயரம் எய்துகிறார். இந்நிலையில் அந்தத் துயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகின்றது. துயரம் குறையக்குறைய, தம்மை ஈர்த்து அருள் செய்த குருநாதர், நாயினேனை நலமலி தில்லையுள் கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்கொழித்து அருளி - (திருவாச2-127-129) சென்றதற்குக் காரணமென்ன என்ற சிந்தனையில் ஈடுபடுகிறார். நேரம் செல்லச்செல்ல இந்தச் சிந்தனையின் முடிவில் ஒரு விடை கிடைக்கின்றது. அந்த விடை வருமாறு: என்னில் - கருணை வான்தேன் கலக்க அருளொடு பராஅமுது ஆக்கினன். . (திருவாக3-179-18)