பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 திருவாசகம் - சில சிந்தனைகள் தோறும் தேங்கி நிற்கும் நிலையில் இறை அனுபவம் ஆகிய அமுதம் நிறைந்துவிட்டது என்றால், அமைச்சராக இருந்த திருவாதவூரர் இப்பொழுது இல்லை. அதற்குப் பதிலாக குருவின் திருவடிகள்பட்டு இறையனுபவ வடிவாகவே அடிகளார் நிற்கின்றார் என்பதே இதன் பொருளாகும். வேறு வகையாகக் கூறினால், குதிரை ஏறி வந்த திருவாதவூரர் என்ற அமைச்சர், குரு அருள் பெற்று மாணிக்கவாசகர் ஆக் மாறிவிட்டார் என்பதே ஆகும். அமைச்சரின் பசு கரணங்கள் அனைத்தும், இரும்பு பொன் ஆனாற்போல், பதி கரணங்களாக மாறிவிட்டன. பழைய திருவாதவூரர் என்ற அமைச்சரும் இல்லை; அவரது பசு கரணங்களான உடலும் இல்லை. அதற்குப் பதிலாக பதி கரணங்களாக மாற்றப்பெற்ற உடம்புடன் கூடிய ஒரு புதிய மனிதர் குருவின் திருவடி தீட்சையால் தோன்றிவிட்டார். அந்தப் புதிய மனிதரின் பெயர் மாணிக்கவாசகர் என்பதாகும். மயிர்க்கால்தொறும் வாக்கிறந்த அமுதம் தேங்கிடச் செய்தனன் என்பதன் பொருள் இதுவே ஆகும். அடுத்து வரும் இரண்டாவது நிலை பின்வருமாறு அமைகிறது. ...கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரப்பிய அற்புதம் ஆன அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன்....... - திருவாச3-171-175) சாதாரண மனித உடம்பு பெறுதற்கு இயலாத அற்புத அனுபவம், தமக்குக் கிடைத்தமையை நினைக்கும்பொழுது, அடிகளாருக்கு முதலில் நினைவு வருவது தம்முடைய உடம்புக்கா இந்த அனுபவம் என்ற வியப்பே ஆகும். எவ்வகை விலங்குகளோடும் ஒப்பவைத்து எண்ணக்கூடிய