பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 329 உடம்பு என்பதால் நாய் உடல்’ என்றார். சதையின் தொகுதி உடம்பாதலால் ஊன் தழை குரம்பை என்றார். உடற்கூறையும், அமைப்பையும் நன்கு அறிந்தவர் அடிகளார். எந்த மகிழ்ச்சியும், இன்பமும் மனத்தகத்துத் தோன்றும்போது ஒருவகைக் கிளுகிளுப்பு உடலிற் பரவுவது பலரும் அறிந்த ஒன்றாகும். அடிகளாரின் உடலில் புறத்தே இருந்து உள் செலுத்தப்பெற்ற இன்ப அனுபவம் அது என்பதை பாய்த்திபாய்ச்சி நிரப்பிய என்ற சொற்களால் அறிவிக்கின்றார். தண்ணிர் முதலியவை பாய வேண்டுமானால் மடைசெய்து பாய்ச்சு கின்ற கர்த்தா ஒருவன் வேண்டும். அடிகளாரின் உள்ளத்தில் இறை அனுபவம் ஆகிய தேனைக் குருவாக வந்தவர் பாய்ச்சினார் என்பதைப் பாய்த்தி நிரப்பிய என்ற சொற்களால் குறித்தார். மடை செய்தாலே நீர் சென்று பாயும். அப்படிப் பாயும் இடங்களில் இடைப்பகுதி மேடுற்றிருந்தால் அந்தப் பகுதிக்கு மறுபடியும் நீரை இறைத்துப் பாய்ச்ச வேண்டும். அதுபோல, உடல் முழுதும் மயிர்க்கால்தொறும் நிறையுமாறு அற்புதமான அமுத தாரைகளைப் பாய்ச்சிய குரு, இப்பொழுது மேட்டுநிலம் போன்றுள்ள எற்புத் துளைகளில் இறைத்துப் பாய்ச்சினான் என்பதுபோல 'ஏற்றினன்' என்றார். நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள்' என்றதால், அவன் திருக்கையால் வருடிய பொழுது ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினார். எற்புத் துளைதொறும் ஏற்றினன்' என்றதால் திருவடி தீட்சை செய்தபொழுது ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினார் ஆயிற்று. . . . . திருவடி தீட்சை என்பது சீடனின் உச்சந்தலையில் குருவினது திருவடியின் கால் கட்டைவிரலை வைப்பது ஆகும். உச்சந் தலையில் இருப்பது ‘சகஸ்ரதளம்' எனப்படுவதாகும். இப்பகுதியில் குருவின் திருவடி படும் பொழுது குருவின் பேராற்றலின் ஒருபகுதி, சகஸ்ரதள 22