பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 திருவாசகம் - சில சிந்தனைகள் வழியாக ஆக்ஞை, விஷாத்தி, அநாகதம், மணிபூரகம், சுவாதிஷ்டானம் என்ற ஐந்து ஆதாரங்களைக் கடந்து மூலாதாரத்தில் சென்று தங்கும். அவ்வாறு தங்கும்போது கிடைக்கின்ற அனுபவத்தின் அளவு குருவின் ஆற்றலைப் பொறுத்ததாகும். இங்குக் குருவாக எழுந்தருளியவர் இறைவனே ஆதலால் அதன் பயன் வாதவூரரை ஒரு விநாடியில் மணிவாசகராக மாற்றிவிட்டது. சாதாரண அனுபவத்தைக்கூட அது கிடைத்தபின்பு, அறிவின் துணைக்கொண்டு, அது எவ்வாறு வந்தது, என்ன செய்தது என்பதை எடுத்துக் கூறுதல் மிகமிகக் கடினமாகும். அப்படியிருக்க, மாபெரும் சிவானந்த அனுபவத்தை, அது எங்கிருந்து எவ்வாறு வந்தது, உடலினுள் எங்கெங்கே தங்கிற்று, எலும்பினுட் சென்று எலும்பையும் உருக்கும் இயல்பை எவ்வாறு பெற்றது என்பவற்றை எல்லாம் தமக்குக் கிடைத்த அனுபவத்தின் பின்னர் அமைதியாக இருந்துகொண்டு, தம் மாபெரும் அறிவின் துணைக்கொண்டு வகைப்படுத்தி, அடுக்கிக் கூற வேண்டுமேயானால் அது மணிவாசகர் ஒருவருக்கே முடிவதாகும். டிவையின் எக்ஸ்டஸி'(Divine ecstasy) என்று ஆங்கிலத்தில் கூறப்பெறும் இறைப்பிரேமை மனிதனைப் பெருமளவு தன்னை மறக்கச் செய்து இன்ப அனுபவத்தைத் தரும். அதனைப் பெற்றவர்கள் எவரும் அது எவ்வாறிருந்தது என்று பின்னர்க் கூறினார்களில்லை. இந்த இறைப்பிரேமைக் கொள்கையை நன்கு அறிந்திருந்த கிறிஸ்தவராகிய டாக்டர். ஜி.யு. போப் அவர்கள், திருவாசகத்தில் ஈடுபட்டு இப்பகுதியைப் படித்து அனுபவித்த பின்னர், திருவாசகம் முழுவதும் என்பை 2-(535to Lirl—abādīr ‘(bone-melting Songs) groisms offluğ69 வியப்பொன்றும் இல்லை. சிவப்பிரகாசர், வள்ளலார், போப் போன்றவர்கள் திருவாசகத்தில் ஈடுபட்டு உணர்ந்ததுபோலப் பலர் உணர்ந்திருக்கலாம். ஆனால், தம்