பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 25 பிரபஞ்சப் படைப்பையும் ஒலியிலிருந்தே படைக்கின்றான் என்பதையும் இத்தமிழர் என்றோ கண்டு கூறினர். இன்றைய விஞ்ஞானம் அண்டத்தின் தோற்றத்தை ஆராயும்போது பேரொலியில் இருந்து இவ்வண்டம் தோன்றியிருக்க வேண்டுமென்ற ஒரு தத்துவத்தை 'பெரும்பேரொலித் தோற்றம்’ (Big-Bang) என்ற கொள்கையால் வலியுறுத்துகிறது. எனவே, நமச்சிவாய வாழ்க என்று அடிகளார் கூறியது இறைவனுடைய ஆதி நாத சொரூபத்தையேயாகும். இறையனுபவத்தை முழுவதுமாகப் பெற்ற அடிகளார் அந்த அனுபவத்தின் எல்லையில் நின்று நாத சொரூபமாக் உள்ள பெருமானை அகமனத்தின் ஆழத்தில் கண்டு கொண்டமையின், 'நமச்சிவாய வாழ்க’ என்று தொடங்கிவிட்டார். இவ்வாறு கூறுவதால் சாதாரண அறிவுடைய மக்கள் அதனைப் புரிந்துகொள்ள முடியாது. ஆதி நாத சொரூபம்’ தான் உண்மையானது என்றால், எத்தனைபேர் அதனை மனத்தில் வாங்கிக்கொள்ள முடியும்? உண்மை என்பது கருத்தளவில் கொள்ளக்கூடிய ஒன்றே தவிர, மனத்தளவில் அதன்ை ஏற்றல் கடினம். மனம் ஒன்றைப் பற்றவேண்டுமானால் பருப்பொருளாக இருந்தாலொழிய சாதாரண மக்கள் அதனை ஏற்பது கடினம். ஆதலால், பரம கருணை உடையவராகிய அடிகளார் தம்நிலையில் இறையனுபவத்தில் மூழ்கிநின்று 'நமச்சிவாய வாழ்க’ என்று சொல்லிவிட்டாலும், அடுத்த விநாடியே நம் போன்றவர்களை மனத்தில் கொண்டு அந்த நுண் பொருளுக்கு ஒரு வடிவைக் கற்பிக்கின்றார். அந்த வடிவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த வடிவைச் சிந்தித்தாலும் அந்த வடிவுக்கு இரு திருவடி இருந்துதானே தீர வேண்டும். அந்தத் திருவடியை நம் மனத்தில் பதிப்பதற்காக நாதன் தாள் வாழ்க’ என்று கூறினார்.