பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 திருவாசகம் - சில சிந்தனைகள் வாதவூரர்பால் நிகழ்ந்துள்ள இம்மாற்றத்தை அறிய முடியவில்லை என்றால் பிறரைப்பற்றிச் சொல்லவேண்டா அடிகளாரிடத்து இம்மாற்றத்தைச் செய்யவேண்டிய காரணம் என்ன? குருநாதர் தரப்போகின்ற வாக்கிறந்த அமுதத்தை அனுபவிக்க வேண்டுமாயின் அதற்குரிய உடல் நிலை தேவைப்படும். சாதாரண உடலமைப்பிற்கூட, சில சந்தர்ப்பங்களில் அதீதமான மகிழ்ச்சி அல்லது துயரம் என்ற, புறமனத்தே தோன்றும் உணர்ச்சிகள் உயிரைப் போக்கிவிடுவதனை இன்றும் காண்கிறோம். புற மனத்தில் தோன்றும் உணர்ச்சிகளுக்கேகூட இந்த ஆற்றல் உண்டு என்றால், சித்தத்தின் அடித்தளத்தில் தோன்றி, அந்தக் கரணங்கள் நான்கையும் மூழ்கடித்து, பொறிபுலன்களை எல்லாம் தன்னுள் அமிழ்த்திப் பொங்கும் இறை அனுபவம், சாதாரண உடல் அமைப்போடுகூடிய திருவாதவூரருக்கு குருநாதர் தந்திருந்தால் ஒரு விநாடிகூட வாதவூரர் பிழைத்திருக்க முடியாது. சாதாரண குருமார்கள் கூட சீடனின் பக்குவம் அறிந்தே உபதேசம் செய்வர் என்பது, பலரும் அறிந்த ஒன்றாகும். இங்குக் குருவாக வந்தவர் பரம்பொருளே ஆவார். எதிரே உள்ள சீடர், மாபெருங் கல்வியாளராக இருப்பினும், சாதாரண உடலமைப்புடைய சராசரி மனிதரேயாவார். குருநாதர் தரப்போவதோ t_i தி கரணங்கள் தாங்க முடியாத இறையனுபவம் ஆகும். எனவேதான், குருநாதர் முதலில் தம் சீடரின் ஆக்கையை மாற்றி அமைக்கின்றார். ஆக்கை அமைத்தனன்’ என்று அடிகளார் கூறியது வெற்றுரை அன்று. அப்படியானால் திருவாதவூரர் புதிதாகப்பெற்ற ஆக்கைக்கும், அவருடைய பழைய ஆக்கைக்கும் வேறுபாடு என்ன? புறத்தே இருந்து பார்ப்பவருக்கு எவ்வித வேறுபாடும் தெரியவில்லை. சொல்லப்போனால், பழைய