பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 333 ஆக்கை அமைச்சருக்குரிய ஆடை அணிகலன் பூண்டு இருந்தது; புதிய ஆக்கை அவற்றைத் துறந்து ஒற்றை ஆடை அணிந்திருந்தது. இந்த வேறுபாடுமட்டுமே புறத்தார்க்குத் தெரிந்ததல்லது, இந்த ஒற்றை ஆடைக்குள் இருக்கும் மனிதர் பழைய வாதவூரர் அல்லர் என்பது யாருக்கும் தெரியவில்லை. அப்படியானால் ஆக்கையில் நிகழ்ந்த மாற்றம் யாது? அது ஆக்கையுள் நிகழ்ந்த மாற்றமாதலின் பிறர் அதை அறியுமாறில்லை. அந்த மாற்றத்தை அடிகளாரே, இதோ குறிப்பிடுகிறார். உள்ளம் என்பது மனித உடலுக்குள், அடி மனத்திற்குக் கீழே இருக்கின்ற ஒரு பகுதியாகும். அதாவது, அந்தக் கரணங்களுள் இரண்டாவதாகச் சொல்லப்படும் சித்தம் என்ற பகுதியாகும். இந்தச் சித்தத்தையே உள்ளம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் அடிகளார். ஒரு மனிதன் அவனுடைய பருஉடல், அவ்வுடலின் பகுதிகளாகவுள்ள பொறிகள் என்ற பருப்பொருள்கள்போக, ஐந்து புலன்கள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் ஆகியவற்றின் தொகுப்பே ஆவான். இவை அனைத்தையும் கடந்துநிற்கும் ஆன்மாபற்றி இங்குப் பேசத் தேவையில்லை. அந்தக் காரணங்களுள் ஒன்றாகிய சித்தத்திற்கு உருகுகின்ற இயல்பு உண்டு; மனத்திற்கும் உருகுகின்ற இயல்பு உண்டு. என்றாலும், இவ் இரு உருக்கங்களுக்கும் இடையே பெருத்த வேறுபாடு உண்டு. மன உருக்கம் அற்பமானது; நிலையில்லாதது; அடுத்து உள்ள சித்தத்தைக்கூடத் தாக்கும் சக்தியற்றது. என்றாலும், உள்ளத்தில்(சித்தத்தில்) தோன்றும் உருக்கம், மனத்தில் தோன்றும் உருக்கம் என்ற இரண்டிற்கும் ஒரு பொதுத்தன்மையும் உண்டு. கண்ணிர் வருதல், நாக்குழறுதல், உடல்கம்பித்தல் ஆகியவை, இரண் உருக்கங்களிலும் ஏற்படும். என்றாலும்