பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 337 ஆனாலும், இவ்வாறமைத்த பெருமக்கள் திருவாசகத்தில் நன்கு ஊறித்திளைத்து, மணிவாசகர் அருளைப் பெற்று. அவரின் திருவடிகளை வணங்கிய பின்னரே இந்த முறைவைப்பை அமைத்துள்ளனர். இந்த நான்கும் ஒரு தொகுப்பாகும். இந்த நான்கு அகவல்களிலும் பேசப்பெற்றுள்ள கருத்துக்கள், ஒரு வரன் முறையைக் கையாண்டு பல செய்திகளை ஒருங்கிணைத்துக் கூறுகின்றன. இதன் பின்னர் வரும் நீத்தல் விண்ணப்பம் முதலிய பகுதிகள், மணிவாசகப் பெருமான் உருகி உருகி, பழைய அனுபவத்தை நினைந்து நினைந்து, அது மீண்டும் தமக்குக் கிடைக்க வேண்டும் என்ற உணர்வோடு பாடப்பட்டவை ஆகும். எனவே இந்த நான்கு அகவல்களும் முன்னே வைத்தமைக்குரிய காரணத்தை ஒருவாறு விளங்கிக்கொள்ள முடிகிறது. நால்வர் பெருமக்களில் காலத்தால் பிற்பட்டவர் மணிவாசகர். இரண்டாவது வரகுணன் காலத்தவர் என்பது உறுதிப்பட்டமையின் எட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அடிகளார் வாழ்ந்துள்ளார் என்பதை உறுதியாய் ஏற்றுக்கொள்ளலாம். நால்வர் பெருமக்களும், அவர்களுக்கு இருநூறு ஆண்டுகள் முற்பட்டவராகிய காரைக்கால் அம்மையாரும், இறைவன் புகழ்பாடும் மெய்ஞ்ஞானியர் என்பதில் ஐயத்திற்கிடமில்லை. இவர்கள் ஐவரும் பக்திப்பரவசத்தால் இறைவனைப் பாடி அதன் பின்னர் மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றவர்களா? அன்றி முன்னரே மெய்ஞ்ஞானம் கைவரப்பெற்று அதன் விளைவாக இறைவனைப் பாடினார்களா என்றவினாவை எழுப்பிக்கொண்டால் விடை காண்பது எளிது. இந்த ஐவரில் வயதால் மிக இளையவர் திருஞானசம்பந்தர் ஆவார். தோடுடைய செவியன்’ என்ற முதற்பாடலைப் பாடுபோது மூன்று ஆண்டுகளே நிரம்பியவராய் இருந்தார். 23