பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 திருவாசகம் - சில சிந்தனைகள் உலகியல் முறையிற் பார்த்தால் ஏட்டுக் கல்வியை எக்காரணம்கொண்டும் அவர் பெற்றிருக்க முடியாது. அப்படியானல் மெய்ஞ்ஞானம் கைவரப்பெற்ற பின்னரே அவர் பாடத் தொடங்கினார் என்பதில் ஐயமில்லை. இக்கருத்தை வலியுறுத்தும்வகையில் "உவமையிலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம், தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்'(பெ.பு: 34-70) என்று சேக்கிழார் பாடுவதால், உணர்வரிய மெய்ஞ்ஞானத்தை ஞானப்பால் அருந்திய அப்பொழுதே இவர் பெற்றுவிட்டார் என்பதை அறிகிறோம். இக்கூற்றிலிருந்து ஒன்றை அறிந்துகொள்ள முடியும். மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றுவிட்டால், ᎦᏚᏮᏈ)©u) ஞானத்தைத் தேடிச் செல்லவேண்டிய அவசியமில்லை. உணர்வில் மெய்ஞ்ஞானம் நிறைந்துவிட்டால், அறிவு வழிப்பட்டதாகிய கலைஞானங்கள்(விஞ்ஞானம் உள்ளிட்ட 64 கலைஞானங்கள்) அவர்கள் திருவடியில் நின்று பணி புரியும். மிகச் சிறிய குழந்தையாகிய திருஞானசம்பந்தர் “ஈறாய் முதல் ஒன்றாய் (திருமுறை : 1-11-2) என்று தொடங்கும் பாடலையும், அவரை ஒத்த வயதினரான நம்மாழ்வார் ‘உளன் எனில் உளன் அவன் (திருவாய்மொழி : 1.9) என்று தொடங்கும் பாடலையும் பாடியுள்ளமையின், மெய்ஞ்ஞானம் பெற்றோர்க்கு விஞ்ஞான அறிவு, தானே வந்து பணிபுரியும் என்பதை அறியமுடிகிறது. - இன்று, நம்மில் பலர் செய்யும் தவறு, மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று ஒட்டி உறவாடாமல் எதிர் எதிர்த் திசைகளில் செல்பவை என்று நினைப்பதேயாகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம்மிடையே தோன்றிய இத்தவறான எண்ணம், மேலை நாட்டைப் பொறுத்தவரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவி இருந்தது என்பது