பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 339 உண்மைதான். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே மேலை நாட்டவர் இத்தவற்றினின்றும் தப்பிப் பிழைத்துக் கொண்டனர். ஆனால் 21ஆம் நூற்றாண்டு தொடங்க உள்ள இந்நேரத்திற்கூட நம்மில் பலர் இத்தவற்றிலிருந்து விடுபடுவதாகத் தெரியவில்லை. மனிதனைப் பொறுத்தவரை அறிவு, உணர்வு என்ற இரண்டு பெரும்பகுதிகள் அவனுள் அமைந்துள்ளன. தலைப்பகுதியிலுள்ள மூளையின் உதவிகொண்டு இயங்குவது அறிவாகும். 200 கோடிக்கும் மேற்பட்ட நியூரான்களின் (Neurone) இணைப்புக்கூட்டமே மூளை ஆகும். கற்கால மனிதனில் தொடங்கி தற்கால மனிதன் வரை அறிவு வளர்ந்துகொண்டே வந்திருக்கின்றது. அந்தப் பழையமனிதன் முதன் முதலில் தீயை உண்டாக்கக் கற்றுக்கொண்டதும், சக்கரத்தை சுழற்றக் கற்றுக் கொண்டதும், நிலத்தில் பயிர்செய்து தானியம் விளைக்கக் கற்றுக்கொண்டதும், பேசக் கற்றுக்கொண்டதும் இந்த அறிவின் துணை கொண்டுதான். இதே அறிவு, மாபெரும் வளர்ச்சியை அடைந்து, பருப்பொருளாகிய அணு எல்லை அற்ற சக்தியின் வடிவமே ஆகும் என்ற கருத்தை, E = mc என்று, இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகிய ஐன்ஸ்டின் கண்டுபிடிக்க உதவியது. ஆனாலும், என்ன புதுமை! இவ்வளவு பெரிய புதுமையைக் கண்டுபிடித்த ஐன்ஸ்டின்கூடத் தம்மூளையில் 10 சதவீதத்தையே உபயோகித்தார் என்று உடற்கூற்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இதை வைத்துக்கொண்டு, விஞ்ஞானத்தின் நேரெதிரானது மெய்ஞ்ஞானம் என்பது அறிவுடைமை ஆகாது. மாபெரும் விஞ்ஞானியாகிய ஐன்ஸ்டின், ராபட் ஏ. மில்லிகன் போன்றவர்கள்கூடச் சிறந்த தெய்வபக்தி உடையவர்களாக, அறிவின் எல்லையை அறிந்தவர்களாக இருந்தார்கள். ஐன்ஸ்டின் கூறிய ஒரு பொன்மொழி இங்கே நினைவுகூறத் தக்கது. சமயத்தொடர்பு இல்லாத