பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 திருவாசகம் - சில சிந்தனைகள் அறிவியல் நொண்டியானது அறிவியல் தொடர்பில்லாத *FLDulb (5G-Tonigs. (Science without religion is lame, Religion without Science is blind) இந்த அடிப்படையை மனத்திற்கொண்டு தமிழகத்தில் தோன்றிய மெய்ஞ்ஞானிகளின் வாழ்க்கையைச் சிந்தித்தால் அவர்களுடைய மெய்ஞ்ஞானம், அதன் பயனாகத் தோன்றிய சமய வாழ்வு என்ற இரண்டிலும் அறிவியல் இழையோடி இருப்பதைக் காணமுடியும். மூடபக்தி என்று இக்காலத்தார் குறிப்பிடும் நிலை, சமய மெய்ஞ்ஞானிகளிடம் இருந்ததே இல்லை. இம் மெய்ஞ்ஞானிகளின் பாடல்களும் அறிவுரைகளும்,அறிவை அடகு வைத்துவிட்ட மூடநம்பிக்கையில் தோன்றியவைகள் அல்ல. இவர்களுடைய குறிக்கோள் மெய்ஞ்ஞானத்தையும், இன்ற உணர்வையும் ஊட்டுவதுதான். அதனைக் கூறுகின்ற பொழுதேகூட, விஞ்ஞான அறிவிற்கு முரண்படாமல் அதனையும் உளப்படுத்திப் பாடிச்சென்றனர். இவ் விஞ்ஞானக் கருத்துக்களைப் போகிற போக்கில் கூறிச்சென்றனரே தவிர, அதனை விரிவுபடுத்திக் கூறாமைக்குக் காரணம் அவர்கள் நோக்கம் வேறாக இருந்ததுதான். . சங்ககாலத்தில், அரசர்களைப்பற்றிப் பாடும்போது கூட இத்தமிழர்களின் விஞ்ஞான அறிவு மின்னல் போன்று பளீரென்று காட்சியளித்ததைக் காண முடியும். இதோ ஒர் உதாரணம்: இரண்டாம் சங்கப் பாட்டென்று சொல்லப்பெறும் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய பாடலின் முதல் மூன்று அடிகளை எடுத்துக்கொள்வோம். மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் (புறம்: 2)