பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை : 341 என்று அப்பாடல் பேசிச்செல்கிறது. இரண்டர்ம் சங்கப்பாட்டு என்றால் ஏறத்தாழ 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் இப்பாடல். மண் திணிந்த நிலன் - மண் துகள்கள் செறிந்துள்ள பூமி, நிலன் ஏந்திய விசும்பு - அந்தரத்தில் தொங்கும் நிலத்தை தன்பால் கொண்டுள்ள ஆகாயம்; விசும்பு தைவரு வளி - ஆகாயத்தையும், பூமியையும் தடவிக்கொடுகின்ற காற்று. ஐம்பெரும் பூதங்களைப்பற்றிக் கூறவந்த இப்பாடல், ஒவ்வொரு பூதத்திற்கும் இன்றியமையாத இலக்கணம் ஒன்றைக் கூறிச்செல்கிறது. பூமியின் இலக்கணம், செறிந்த துகள்களைப் பெற்றிருப்பது, ஆகாயத்தின் இலக்கணம், இந்தப் பூமியை எவ்வித பற்றுக்கோடுமின்றித் தாங்கிக் கொண்டிருப்பது. தைவரு வளி, பூமியை வருடுகின்ற காற்று என்பதன் மூலம், பூமியின் சுழற்சியையும் அறிந்து கூறினாராயிற்று. இவ்வாறு பாடுபவர்கள் விளக்கம் கூறாமல் போகிற போக்கில் பாடிச்செல்வதால், பின்னே வந்தவர்கள் இது விஞ்ஞானக் கருத்து என்று தனியே எடுத்துக் கொள்ளவில்லை. 'ஏந்திய’ என்ற ஒரு சொல்லும் தைவருதல்’ என்ற ஒரு சொல்லும், 16ஆம் நூற்றாண்டில் மேலைநாட்டில் கண்டுபிடிக்கப்பெற்ற ஒரு விஞ்ஞானப் புதுமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டன. இதில் வியப்பு என்னவென்றால், கோப்பர் நிக்கசும், கலிலியோவும் பூமி உருண்டை என்று சொன்னபோது மேல்நாட்டுச் சமயவாதிகளும், விஞ்ஞானி களும்கூட அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தமிழ் நாட்டவர்கள் புறநானூற்றுப் பாட்டில் வரும் கருத்தை ஏற்றுக் கொண்டமைக்குக் காரணம், அந்த விஞ்ஞான அறிவு மக்களிடையும் பெருமளவு பரவி இருந்ததுதான். -