பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திருவாசகம் - சில சிந்தனைகள் நாதன் என்றால் யாவருக்கும் தலைவன் என்று பொருள் தரும். தாள் என்பது பருப்பொருளாக நோக்கும் இடத்துத் திருவடியையும், நுண்பொருளாக நோக்குமிடத்து இறைவன் திருவருளையும் குறிக்கும். உலகத்தில் பல்வேறு சமயங்கள் உண்டு. பெளத்தம், சைனம் தவிர ஏனையோர் அனைவரும் கடவுளை நம்பி அப்பொருள்பற்றிப் பேசுகின்ற இயல்பு உடையவர்கள் ஆவர். இந்தப் பூமியை ஆகாயத்திலுள்ள இறைவன் தன் காலைப் பதிப்பதற்கு உரிய இடம் என்று விவிலியம் பேசுகின்றது. தமிழ்நாட்டில் தோன்றிய அருளாளர்கள் எத்தனையோ விதமாக இறை வடிவைப் பாடினாலும் திருவடியைத்தானே பாடி உள்ளனர். ஏனைய சமயங்கள் உயிர்களை உய்விக்கும் தொழிலைச் செய்கின்றவனாகக் கூறினவே தவிர அவன் திருவடிக்கு முக்கியத்துவம் தரவில்லை. என்ன காரணத்தினாலோ சைவர், வைணவர் ஆகிய இருவரும் திருவடிப் பெருமையைப் பேசினர். பந்தங்களிலிருந்து விடுபட்ட ஆன்மா இறுதியாகச் சென்று சேரும் இடம் அவன் திருவடி நீழலே என்று சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களும் கூறிவந்துள்ளன. நாவுக்கரசர் பெருமான் திருவையாற்றுப் பதிகத்தில் திருவடிப் பெருமையை இருபது பாடல்களில், 'ஐயாறன் அடித்தலமே (திருமுறை: 4-92-1-20) என்ற முத்திரையுடன் பாடிச் செல்கிறார். வைணவப் பெரியாராகிய நம்மாழ்வாரும் திருவாய்மொழி முதற் பாட்டிலேயே துயரறு சுடரடி தொழுதெழென் மனனே - (நாலாயிரதிருவாய்-1) என்று பாடியுள்ளார். மிகப் பழங்காலத்திலேயே சைவ, வைணவர்கள் திருவடிப் பெருமையைக் கூறிய காரணத்தி னால் தமிழில் தோன்றிய பிற சமய இலக்கியங்களும் திருவடிப் பெருமையைப் பேசலாயின. பெளத்த சமய அடிப்படையில் தோன்றிய மணிமேகலை,