பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 திருவாசகம் - சில சிந்தனைகள் இந்த முன்னுரையோடு திருவாசகத்தில் நுழைவோமே ஆனால், முதல் நான்கு அகவல்களில் எத்துணை விஞ்ஞானக் கருத்துக்களை அடிகளார். பேசுகிறார் என்பதை அறிய முடியும். கல்வி என்னும் பல்கடல்: என்று அவர் சொல்லியதற்கு உண்மையான பொருளைக் காண்டல் வேண்டும். அறிவின் அடிப்படையில் கிடைக்கும் விஞ்ஞானத்தில் இயற்பியல், வேதியல், உயிரியல், வானியல், புவியியல் முதலிய துறைகள் ஒவ்வொன்றும் கடல்போல் பெருகி நிற்கின்றன. அதனாலேயே பல்கடல்’ என்றார். : அடிகளார் திருப்பெருந்துறையில் முழு மாற்றம் பெறுவதற்கு முன்னர், இவ் விஞ்ஞானத்தில் பல துறைகளிலும் ஆழ்ந்து பயின்றுள்ளார் என்பதை அவருடைய பாடல்கள் காட்டிச்செல்கின்றன. அவர் பாடும் விஞ்ஞானக் குறிப்புக்கள் போகிறபோக்கில் சொல்லப் பெற்றவையே தவிர, அவை விஞ்ஞானத் துறையின் பாட நூல்கள் அல்ல. இதனை மனத்தில் இருத்திக்கொண்டு அவர் கூறும் சில பகுதிகளை ஒரளவு விரிவாகக்காண்பது பயனுடையதாகும். சிவபுராணத்தில் ‘புல்லாய், பூடாய்', என்று தொடங்கும் பகுதி கூர்தல் அறத்தை அறிவிப்பதாகும். கூர்தல் அறம் என்ற கருத்தோ, செடி கொடிகள் முதலிய வற்றுக்கு உயிருண்டு என்ற கருத்தோ 18ஆம் நூற்றாண்டு வரை மேலைநாட்டு விஞ்ஞான வளச்சியில் இடம் பெறவில்லை. மேலை நாட்டு டார்வினும் இந்திய நாட்டு ஜே.சி. போஸும் முறையே கூர்தல் அறத்தையும், செடி, கொடிகளுக்கு உயிருண்டு என்ற தத்துவத்தையும் தெரிவிக்கின்றவரை மேலை நாட்டு விஞ்ஞானம் இதனை அறிந்திருக்கவில்லை. ஆனால், போஸிற்கு 2000 ஆண்டு கட்கு முற்பட்ட தொல்காப்பியனார் செடி, கொடிகளை,