பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 343 ஓர் அறிவு உயிர்' என்று வகைப்படுத்திக் கூறினார். எனவே, மணிவாசகர் கூர்தல் அறத்தைப்பற்றிப் பேசும்பொழுது ஏதோ ஒரு பக்தர், பக்தி மேலீட்டால் கூறிவிட்டார் என்று நினைப்பது தவறு. டார்வினைப் பொறுத்தவரை உயிர்வர்க்கத்தை இனம்பிரித்து, ஒவ்வொரு இனமும் உலகில் நிலைபெறுவதற்கு ஓயாது போராட வேண்டுமென்றும், அந்தப் போராட்டத்தில் உடல் வலுவுடைய வர்க்கமே வெற்றிபெற்று நிலைபெற முடியும் என்றும் கூறினார். இவருடைய கொள்கை உடல் அமைப்பை அடிப்படையாகக் கொண்டதேதவிர, உயிர் அல்லது ஆன்மாபற்றி அது ஒன்றும் கூறவில்லை. ஆனால், அடிகளார் இதே கூர்தல் அறத்தை டார்வினுக்கு 1000 ஆண்டுகள் முன்னர்க் கூறியதுமன்றி, பலபடிகள் மேற் சென்றும் உள்ளார். டார்வின், வளர்ச்சி முறையில் மனிதன்வரைக்கும் வந்து, அத்தோடு நிறுத்திக் கொண்டார். ஆனால், அடிகளாரோ மனிதரிலேயே அரக்கரும் உண்டு, முனிவரும் உண்டு என்று இரண்டு பிரிவினைசெய்து அரக்க குணம் உடையவர்கள் பேயாய், கணங்களாய்ப் பிறப்பர் என்றும், முனிவர்போன்று புலனடக்க குணம் உடையவர்கள் தேவராய்ப் பிறப்பர் என்றும் கூறுகிறார். இம்மட்டோடு நில்லாமல் ஒரே ஆன்மா ஒர் அறிவு உயிரில் தொடங்கி ஆறறிவு உயிர்வரை வளர்ந்து, பல பிறப்புக்களையும் எடுக்கின்றது என்பதை ‘எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்' என்கிறார். இது உயிரியல்பற்றி அவர்கூறிய கருத்தாகும். - திரு அண்டப்பகுதியில் வரும் முதல் ஐந்து அடிகளுக்குரிய விரிவான விளக்கம் முன்னரே பாடலுக்குத் தந்த விளக்க உரையில் கூறப்பெற்றுள்ளது. பேரண்டம் விரிந்து செல்கிறது என்ற கருத்து தமிழ் முதலிய எந்த இலக்கியத்திலும், பிறநாட்டு விஞ்ஞான