பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 திருவாசகம் - சில சிந்தனைகள் வளர்ச்சியிலும் அற்றைநாளில் காணப்படாத புதுமை ஆகும். இதனையும் மணிவாசகர் இங்குக் கூறியமைக்குக் காரணம், தாமறிந்த விஞ்ஞான வானியற் கருத்துக்களை எடுத்துச்சொல்வதற்காக அன்று. விரிந்துசெல்லும் அண்டம் என்று கூறியதிலிருந்து மற்றொன்றையும் பெறவைக்கிறார். விரிந்து செல்லும் இயல்பைக் கூறியவுடன், இந்த அண்டத்தை அறிவுடைய பொருளாக, தன்னிச்சையாகச் செயற்படும் ஒரு பொருளாக நாம் நினைத்துவிட ஏது உண்டு. போதல், வருதல், விரிதல் முதலிய தொழில்கள் நடைபெறவேண்டுமானால் இத் தொழில்களைச் செய்யும் கர்த்தா ஒருவன் வேண்டும். விரிகின்ற அண்டம் என்று கூறுகின்றபொழுது, விரிதல் ஆகிய தொழிலைச் செய்யும் கர்த்தா அண்டமே என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். அது தவறு. அண்டம் என்பது சடப்பொருளாகும். தானாக இயங்கும் ஆற்றல் சடப் பொருளுக்கு இல்லை. அண்டம் விரிகிறது என்றால் அதனை விரிந்துசெல்லுமாறு பணிக்கின்ற கர்த்தா ஒருவன் இருத்தல் வேண்டும். ஏவுகின்ற கர்த்தா ஏவப்பட்ட பொருளைவிடப் பெரியவனாக இருத்தல் வேண்டும். சடப் பொருளாகிய அண்டத்தை விரியுமாறு ஏவுகின்றவனைப் 'பெரியோன் என்றார். பாடலின் நேரான பொருள், வடிவால் அண்டத்தைவிடப் பெரியவன் என்பதாகும். தம்முடைய வானியல் அறிவுகொண்டு அண்டங்கள் விரிந்துசெல்லும் இயல்பை அன்றே விளக்கிய அடிகளார், இதற்கு எதிராக நுண்மையான அனுபற்றியும் பேசுகின்றார். மேல்நாட்டு விஞ்ஞானம், கடைசித் துகளுக்கே அணு என்று பெயரிட்டபொழுது, அதைவிடச் சிறிதாக அதை உடைக்க முடியாது என்று கருதித்தான் அப்பெயரைக் கொடுத்தது. ஆனால், இந்தக் கருத்துத் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்,