பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 345 தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மெய்ஞ்ஞானி அணுவைவிடச் சிறியதொரு பொருளுமுண்டு என்பதை நன்கு அறிந்திருந்தார். எனவே, இறைவனை அண்டத்தைவிடப் பெரியவன் என்று கூறிய அந்த மெய்ஞ்ஞானி, அதே இறைவனை அணுவைவிடச் சிறியவன் என்ற கருத்துப்பட, 'அணுத்தரு தன்மையில் ஐயோன் காண்க திருவாச : 3-45) என்றும் கூறுகிறார். இனி மற்றோர் இடத்திலும், அணு என்பது பல பொருள்களின் கூட்டம், அவற்றை ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்தால் உண்மையிலேயே உடைக்க முடியாததாய், ஒன்று என்று சொல்லக்கூடியதாய் ஒரு பொருள் எஞ்சும் என்ற கருத்துப்பட சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் என்று பேசுகிறார். அணுவைவிடச் சிறியதாய், பிரிக்க முடியாததாய் ஒன்றாய் நிற்கும் தன்மை உடைய அப்பொருளுக்கு என்ன பெயர் இடுவது? இதோ அடிகளார், சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் திருப் பெருந்துறை உறை சிவனே (திருவாக 22-7) என்கிறார். இப்பரந்த உலகை முக்கூட்டுப் பரிமாணம் உடைய (Three Dimension) Gusrajgir grašiū) sporcibly gosé(5 முற்பட்ட காலம்வரை மேல்நாட்டு விஞ்ஞானம் கூறிவந்தது. காலம் என்ற ஒன்றை நான்காவது பரிமாணம் (Fourth Dimension) 6T6òTğı @p#5ääT @pg686¡) & fffluouř ஐன்ஸ்டினே ஆவார். இன்னும் ஒருபடி மேலே சென்று முக்கூட்டுப் பரிமாணம் உடைய இந்தப் பிரபஞ்சம், நான்காவது பரிமாணமாகிய காலத்தத்துவத்தில் தோன்றி, மறைந்து, மீண்டும் தோன்றும் இயல்புடையது என்று முதன் முதலிற் கூறியவரும் ஐன்ஸ்டினே ஆவார். இதே