பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 திருவாசகம் - சில சிந்தனைகள் கருத்தை அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மணிவாசகர் என்ற மெய்ஞ்ஞானி, ஞாலமே விசும்பே இவை வந்துபோம் காலமே உனை என்றுகொல் காண்பதே (திருவாச5-43) என்று பாடுவதிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஞாலம்’ என்ற சொல்லினால் முக்கூட்டுப் பரிமாணம் உடைய பிரபஞ்சத்தைக் குறிக்கிறார். இப்பிரபஞ்சம் தோன்றி, மறைந்து, மீண்டும் தோன்றுவதற்கு இடமாக உள்ளது காலமாகிய நான்கள்ாது தத்துவம் என்பதை, வந்து போம் காலமே' என்ற சொற்களால் குறிக்கிறார். திருவாசகத்தில் காணப்பெறும் இந்த விஞ்ஞானக் கருத்துக்களைக் கூறியதன் நோக்கம், மணிவாசகர் ஒரு விஞ்ஞானி என்பதை நிறுவுவதற்கு அன்று. மெய்ஞ்ஞானி ஆகிய அவர், எலும்பை உருக்கும் பாடல்களை இயற்றி மானுட சமுதாயத்தை உய்விப்பதற்காகவே இறைவனால் படைக்கப்பட்டவர் என்பது உறுதியானதே ஆகும். அப்படியிருக்க, ஆயிரம் ஆண்டுகள் கழித்து மேனாட்டு விஞ்ஞான உலகம் காணப்போகின்ற புதுமைகளை இவர் எவ்வாறு தம்பாடல்களுள் பெய்தார் என்ற வினாத் தோன்றினால் அதற்கு இரண்டு வகையான விடைகள் உண்டு. முதலாவது விடை, தமிழர்களைப் பொறுத்த மட்டில் பல விஞ்ஞானக் கருத்துக்கள் அறிஞர்களிடையே நன்கு அறியப்பட்டிருந்ததாகும். மாபெரும் கல்வியாளராகிய திருவாதவூரற்கு அவர் கற்ற கல்வியின் அடிப்படையில் இது தெரிந்திருக்கவேண்டும். இவ்வாறின்றி ஒருசிலருக்கு முன்பின் தொடர்பில்லாமல் மாபெரும் உண்மைகளை » cir@56ðarfreq(Intution) மின்னல்போல மனத்திடைத்