பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 347 தோற்றுவிக்கும். இதுவே இரண்டாவது விடையாகும். மெய்ஞ்ஞானி ஆகிய அவருக்கு உள்ளுணர்வு இயற்கையின் பல இரகசியங்களை மின்னல்போல மனத்தின் ஆழத்தில் தோன்றுமாறு செய்திருந்தது. அதனாலேயே பிரபஞ்ச விரிவுபற்றியும், அணுவின் தன்மைபற்றியும், காலம் என்னும் நான்காவது தத்துவம்பற்றியும் அவரால் மிக எளிதாகப் பாடமுடிந்தது. இது இயலுமா என்ற ஐயம் இக்காலத்தார் பலருக்குத் தோன்றுவது இயற்கை 19ஆம் 20ஆம் நூற்றாண்டு விஞ்ஞான வளர்ச்சியை அறிபவர்கட்கு ஒன்று உறுதியாகத் தெரியும். இந்த இரண்டு நூற்றாண்டுகளில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட Loggoldésor (Inventions), &róltfig oil 15air (Discoveries) ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப் பார்த்தால் இவற்றில் எழுபது சதவிகிதத்திற்கு(70% மேற்பட்டவை உள்ளுணர்வின் துணைகொண்டே காணப்பெற்றவை என்பது விளங்கும். அப்படியானால் மெய்ஞ்ஞானிக்கும், விஞ்ஞானிக்கும் உள்ள வேறுபாடு என்ன? உள்ளுணர்வின் உதவியால் திடீரென்று மனத்தில் தோன்றும் புதிய முடிவுகளை அப்படியே கூறிவிடுவது மெய்ஞ்ஞானியின் இயல்பாகும். அந்த முடிவுகள் தோன்றிய பின்னர் விஞ்ஞானி பின்நோக்கிச் செல்கிறார். தோன்றிய முடிவுகளுக்கு காரணகாரிய முறையில் வழியை ஆராயத் தொடங்குகிறார். பின்னர் அந்த முடிபுகளை நிறுவுவதற்கு தாம் பயன்படுத்திய காரண காரியத் தொடர்புகளை வெளியிடுகிறார். அடுத்து, திருச்சதகம் தொடங்கி, முத்தி நெறி அறியாத' என்று ஆரம்பிக்கும் அச்சோப்பதிகம்வரை அனுபவப் பிழிவாக அறுநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடுகிறார். தறிகெட்டு அலையும் மனித சமுதாயம், அன்றேகூட, வாழ்வின் குறிக்கோள் என்ன