பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 திருவாசகம் - சில சிந்தனைகள் என்று அறியாமல், எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் இனி என்னே உய்யுமாறு என்று எண்ணி அவதிப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில், திருவாசகப் பாடல்களை கருணைக் கடலான இறைவன் மணிவாசகர் மூலம் தோற்றுவித்தான். உலகியலில் ஈடுபட்டு உழலும் மனிதன், திடீரென்று திருவாசகப் பாடல்களுக்குள் நுழைந்தால் அதனைப் புரிந்துகொள்ளவோ, உணர்ந்துகொள்ளவோ முடியாத மன நிலையில் இருக்கின்றான். இதனால் அவனை இத் திருவாசகத்துள் புகுத்துவதற்கு, முன்னுரையாக ஒன்று வேண்டும் என்று நினைத்த இறைவன், அடிகளாரைக் கொண்டே நான்கு அகவல்களை இயற்றுவித்தான். இறை அனுபவம், எல்லா உயிர்களுக்கும் குறிக்கோளாகும் என்பதைப் பெறவைத்தது அகவல்களின் முதல் வெற்றியாகும். எல்லாவற்றிலும் பயனைக்கருதும் மனிதன், இந்த அனுபவத்துள் நுழையவேண்டும் என்று தொடங்கும் பொழுது, இதனைத் தருபவன் யார்? அவனுடைய வல்லமை என்ன? எம்போன்றவர்களுக்கு அவன் இரக்கம் காட்டுவானா என்ற ஐயங்கள் தோன்றும். இவற்றிற்கு எல்லாம் விடை கூறுமுகமாக, இறைவன் எத்துணைப் பெரியவன் என்றும், எனினும் எளிவந்த தன்மை உடையவன் என்றும், பக்தி வலையிற் படுபவன் என்றும், பிறவிக்கடலிலிருந்து கைதுக்கி விடுபவன் என்றும் அவன் பெருமையை அகவல்கள் விரித்து உரைக்கின்றன. இத்துணைப் பெரியவன் நம்மையும் ஒரு பொருட்டாக்கி ஆட்கொள்வானோ என்ற ஐயம் தோன்றும்பொழுது, அஞ்ச வேண்டா! கரிக் குருவிக்கும், பன்றிக் குட்டிக்கும்கூட அவன் அருள் செய்கின்றவன் என்பதை எடுத்துக்கூறுவதன் மூலம், மனித மனத்தின் ஆழத்தில் புதைந்துகிடக்கும் நம்பிக்கையை தூக்கி எடுத்து அந்த