பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. திருவாசகம் - சில சிந்தனைகள் கைராசிக்காரர்’ என்றும், கொடையாளியைப் புகழும் போது கொடுத்துச் சிவந்த கை என்றும் கூறுவதைக் காணலாம். கை, தானே தொழிற்படுவது இல்லை. அந்தக் கையை உடையவர்தான் இதனைச் செய்தார் என்றாலும், தன்னை வாழவைத்தது அந்தக் கைதான் என்ற நினைவில் கையை மட்டும் புகழ்கிறோம். அதேபோல இறைவனுக்கு வடிவத்தைக் கற்பித்த தமிழர்கள் அவனுக்கு அபய கரம் ஒன்று உண்டு என்றும், வரத கரம் ஒன்று உண்டு என்றும் பல்வேறு வகையில் கூறியுள்ளனர். பிறவிக் கடலில் பட்டு அழுந்தும் உயிர்களை அஞ்ச வேண்டாம் என்று அபய கரம் தைரியம் சொல்கிறது. இவ்வாறுதான் உல்கில் இருக்க வேண்டுமென்று விரும்பி வேண்டுவோருக்கு வரத கரம் அள்ளித் தருகிறது. அவன் கடைக்கண் பார்வை உள்ளத்தில் உரம் ஏற்றுகிறது. ஆனால், இந்த உறுப்புகள் எதுவும் பிறவிப் பெருங்கடலை நீந்த உதவவில்லை. திருவடி ஒன்றுதான் அந்த அருங்காரியத்தைச் செய்கிறது. ஆதலால், தமிழர்கள் திருவடிப் பெருமையைப் பேசினர். அந்தத் திருவடியை மக்கள் மனத்தில் பதிக்கவேண்டு மென்ற கருத்தில்தான் அடிகளார், 'நாதன் தாள் வாழ்க’ என்று கூறினார். இரண்டாவதாக உள்ள அடி, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்பதாகும். படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்திலும் இறைவன் உறைகின்றான் என்ற உண்மையை, இத்தமிழர் என்றோ கண்டுகொண்டனர். அங்ங்ணம் உறைகின்ற இறைவன் ஆறறிவு படைத்த மனிதனின் உள்ளத்தில் இல்லாமல் இருப்பானா? உறுதியாக இருப்பான் என்பதில் ஐயமில்லை. அக்கருத்தைக் கூறவந்த அடிகளார், இந்த அடியின்மூலம் சில நுண்ணிய கருத்துக்களைப் பெற வைக்கின்றார். -