பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 31 போன்றவர்களுக்கு இயலாத ஒன்றாகும். அப்படியானால் ஒரு வினாத் தோன்றும். அவனை நம் நெஞ்சுள்ளே இருத்திக்கொள்ளும் ஆற்றல் நம்மாட்டு இல்லையா என்பதே அவ்வினா. அறுவகைக் குற்றம் முதலிய குப்பைகளை நெஞ்சினுள் போட்டு நிரப்பியுள்ளோம். அவன் எவ்வாறு நம்முள்ளே நிலையாக இருக்க முடியும்? வினாவுக்கு விடை கூறுவதுபோல மணிவாசகப் பெருந்தகை ஒரு அற்புதமான சொல்லைக் கையாள்கிறார். 'நீங்காதான்’ என்ற எதிர்மறை வினையாலணையும் பெயரை இறைவனுக்குச் சூட்டுகிறார். நீங்குதலும், நீங்காமையும் அவனுடைய விருப்பத்தின்படி நடை பெறுகின்ற ஒன்றாகும். அவனைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் நமக்கில்லை என்றால், எக்கேடாவது கெட்டு ஒழிந்துபோ என்று கூறிவிட்டுப் பெருமான் நெஞ்சில் இருந்து நீங்கிவிடுவானோ? என்று ஐயுறுவார்க்கு விடை கூறுவதுபோல நீங்காதான்’ என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார். நெஞ்சிலிருந்து நீங்காமைதான் அவனுக்குரிய இயல்பு. இன்னும் வேறுவகையில் கூறவேண்டுமானால் அவனை நீக்கிவிட்டு அதிலும் குப்பையைப் போட வேண்டுமென்று நாம் கருதினாற்கூட அவன் நீங்க மாட்டான் என்ற கருத்தும் அதனுள் புதைந்து உள்ளது. இது ஏன் நிகழ்கிறது என்றால், அவனுடைய பரம கருணையே அதற்குக் காரணமாகும். இதே கருத்தை மணிவாசகருக்கு இருநூறு ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த நாவுக்கரசர் பெருமான் வேறுவகையில் கூறுகிறார். புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும் - - (திருமுறை :4-94-8) என்ற பாடலில் மனித மனத்தின் இயல்பை நன்கு அறிந்த நாவுக்கரசர் நீங்காமல் இருக்கவேண்டிய பொறுப்பை