பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருவாசகம் - சில சிந்தனைகள் இறைவனிடமே விட்டுவிடுகிறார். நான் r புழுவாகப் பிறந்தாலும் உன் திருவடி என் மனத்தைவிட்டு நீங்காமல் இருக்க நீ பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் போது, நம் குறைபாட்ட்ை நன்கு அறிந்து நாவுக்கரசர் பேசுவதை அறிய முடிகிறது. இனி, இங்கு மணிவாசகப் பெருமான் இமைப் பொழுதும்’ என்று தொடங்குவதன் நோக்கம் ஒன்று உண்டு. அது வருமாறு: எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்யவேண்டுமென்று நினைப்பவர்கள்கூட நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிவைப்பது உலக இயற்கை. எனவே, இறைவனை உள்ளத்தில் இருத்த வேண்டும் என்ற நினைவு தோன்றியபோது, அந்த நினைவு உண்மையாக இருக்குமானால், நிச்சயமாக அவன் உள்ளத்தில் தோன்றுவான். ஆனால், அந்த நினைவு நிலைத்திருப்பதில்லையே! எனவே, நெஞ்சத்தில் வந்தமர்ந்தவுடன், நெஞ்சில் இருத்தும் நினைவு மாறி விட்டால், அவன் போய்விடுவானோ என்ற ஐயம் மனத்தில் தோன்றுவது இயற்கை அந்த ஐயத்தைப் போக்குவதற்கே நம் போன்ற மக்களைப் பார்த்து, நீவீர் அஞ்ச வேண்டா, இமைப்போதும் அவன் நீங்கமாட்டான்' என்று உறுதி கூறுவார் போல இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார். இமைப்பொழுதும் நீங்காதான் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனத்திலும் இருக்குமாயின், தவறுசெய்யத் தொடங்கார். ஓரிடத்தைவிட்டு ஒருவன் நீங்கவேண்டுமானால் அவன் கைகளாலோ, தலையாலோ செல்ல முடியாது. அவனுடைய கால்களினாற்றான் நீங்கவேண்டும். இறைவன் திருவடி ஒரோவழி நீங்கிச் சென்று மீளுமோ என்று அஞ்சினால், அந்தச் சந்தேகத்தைப் போக்குவார் போல அந்தத் திருவடியை வாழ்த்துகின்றார். அவன் நெஞ்சத்தில் நிலைபெறுவதற்குக் காரணமாக இருப்பது