பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருவாசகம் - சில சிந்தனைகள் என்ற மூன்றாவது அடியில் திருப்பெருந்துறையில் தம்மை ஆண்டுகொண்ட குருவை வாழ்த்துகிறார். ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன்அடி வாழ்க (4-5) தேவார காலத்தில் ஆகமம் பற்றிய குறிப்புகள் அதிகம் காணப்படவில்லை. ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே (திருமுறை :5-12-4) என்று நாவுக்கரசர் பெருமானும், அண்டர் தமக்கு ஆகமநுால் மொழியும் ஆதியை (திருமுறை :7-84-8) என்று சுந்தரரும் கூறுகின்றனர். ஆனால் மணிவாசகப் பெருமான் காலத்தில் ஆகமம் பற்றிய செய்திகள் தமிழகத்தில் நிரம்பப் பரவியிருக்க வேண்டும். எனவே, 'ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க’ என்று பாடுகிறார். இவ்வாறு கூறுவதிலும் ஒரு புதுமையைப் புகுத்துகிறார் அடிகளார். சிவபெருமான் அருளியவை ஆகமங்கள் என்ற நம்பிக்கை தமிழகத்தில் வளர்ந்து இருந்தது என்பது உண்மைதான். என்றாலும் 'ஆகமம் ஆகி நின்று என்று சொல்வது சற்றுப் புதுமையானதே. பொதுவாகச் சைவ ஆகமங்கள், திருக்கோயில் அமைப்பு, கோயில்கள் கட்டப்பட வேண்டிய முறை, மூர்த்திகள் வைக்கப்பெற வேண்டிய இடம் ஆகியவை பற்றிப் பேசுவதுடன் வழிபாட்டு முறை பற்றியும் பேசுவன ஆகும். அப்படியிருக்க ஆகமம் ஆகி நின்றான், ஆகம வடிவாகவே இறைவன் உள்ளான் என்று கூறுவது, வேறு எங்கும் காணப்படாத புதுமையாகும். திருக்கோயில்களில் கோபுரத்திலிருந்து, சுற்றுமதில்வரை எல்லாம் சிவவடிவம் என்ற கருத்துத் தோன்றுவதற்கு அடிகளாரின் 'ஆகமம்