பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருவாசகம் - சில சிந்தனைகள் இலக்கியங்களில் பயின்றுவருவதைக் காணலாம். ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த காழிப் பிள்ளையார், குற்றம்நீ குணங்கள்நீ கூடல்ஆல வாயிலாய் (திருமுறை :3-52-3) என்று பேசுவது சிந்திக்கத்தக்கது. இராம காதையைப் பாடிய கம்பநாடன், இராமனை நோக்கி வாலி கூறுவதாக, பாவம் நீ தருமம் நீ U6)ಹLi நீ உறவும் நீ (கம்பன் : வாலிவதை-129) என்று கூறுவதும் சிந்திக்கத்தககது. இந்த அடிப்படையை மனத்தில் வாங்கிக்கொண்டால் மாறுபாடுகள், முரண் பாடுகள், இரட்டைகள் என்று சொல்கின்ற கருத்தை இந்நாட்டவர் ஏற்கவில்லை என்பது நன்கு புலனாகும். அதை நன்கு விளக்குவதற்கு என்றேபோலும், 'ஏகன் அநேகன் இறைவன் என்று பாடுகிறார் அடிகளார். ‘ஏகன் என்றால் ஒன்று அல்லது ஒருவன் என்று. பொருள்படும். அநேகன் என்றால் பல அல்லது பலர் என்று பொருள்படும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. பலவாய் இருப்பதை ஒன்று என்று அழைப்பதோ, ஒன்றாய் இருப்பதைப் பல என்று கூறுவதோ சரி இல்லை. அறிவின் அடிப்படையில் நின்று, ஆயும்போது இவ்வேறுபாடு நியாயமானதே. இவற்றை எல்லாம் கடந்து நின்று காணும்போது ஏகமாய் நிற்பவனும், அநேகனாய் நிற்பவனும் ஒருவனே என்பது தெளிவாகும். மேலும், அநேகன்’ என்ற சொல்லே விநோதமான ஒன்றாகும். ஏகன், அநேகன் என்ற இரண்டுமே வடசொற்கள்தாம். ஆனால், அந்த இரண்டு சொற்களுக்கும் னகர ஈற்றைத் தருவதன் மூலம் அடிகளார். அவற்றைத் தமிழ்ச் சொற்களாக மாற்றுகிறார். அதிலும் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. னகர ஈறு ஒருமைக்குரியது. எனவே, ஏகன் என்ற சொல்